லக்னோ,

உ.பி. சட்டசபை தேர்தலையொட்டி மத்திய, மாநில கட்சிகளின் பிரசாரம் விறுவிறுப்படைந்து உள்ளது.

சமாஜ்வாதி கட்சி காங்கிரஸ் கட்சியுடன் கூட்டணி வைத்துள்ளதை தொடர்ந்து, அகில இந்திய காங்கிரஸ் தலைவரான ராகுல்காந்தியும், தற்போது உ.பி.யை ஆளும் சமாஜ்வாதி கட்சியின் முதல்வரான அகிலேஷ் யாதவும் ஒரே மேடையில் பேசுகிறார்கள்.

இந்த பிரசார கூட்டம் நாளை நடைபெற இருக்கிறது.

உ.பி. மாநில சட்டசபை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற உள்ளது.  பிப்ரவரி 11ந் தேதி தொடங்கி மார்ச் 8ந்தேதி முடிவடைகிறது.

உ.பி.,யில் காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி  ஏற்பட்டபிறகு நடைபெறும் முதல் பிரசார கூட்டம் நடை நடைபெறுகிறது. இந்த கூட்டத்திலும்  ராகுலும், அகிலேசும் ஒரே மேடையில் பிரசாரம் செய்ய உள்ளனர்.

மேலும் இருவரும் இணைந்து கொடியசைத்து, கூட்டணி பிரசாத்தை துவக்கி வைக்க உள்ளனர்.

இந்த கூட்டத்தில்  பிரியங்காவும் கூட்டணியை ஆதரித்து பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. அதுபோல முதல்வர்  அகிலேஷின் மனைவி டிம்பிளும் பேச இருப்பதாக தகவல்கள் கூறுகிறது.

இதன் காரணமாக இந்த கூட்டம் முக்கியத்துவம் பெற்றுள்ளது. மேலும் பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது.