கான்பூர் செல்லும் வழியில் ரவுடி விகாஸ் துபே சுட்டுக கொலை

கான்பூர்

த்தரப்பிரதேசத்தில் 8 காவல்துறையினர் கொல்லப்பட்ட வழக்கில் நேற்று கைதான ரவுடி விகாஸ் தேபே நேற்று இரவு கான்பூர் செல்லும் வழியில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தின்  மிகப்பெரிய ரவுடியான விகாஸ் துபே என்பவனைப் பிடிக்க காவல்துறையினர் அவன் இல்லத்தை இந்த மாதம் 3 ஆம் தேதி முற்றுகை இட்டனர்.   அப்போது ரவுடியின் ஆட்கள் காவல்துறையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டதால் 8 காவல்துறையினர் கொல்லப்பட்டனர்.  இது நாடெங்கும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்தையொட்டி ரவுடி விகாஸ் துபே தலைமறைவானான்.   அவனைத் தேடும் பணியில் காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டனர்.  இந்நிலையில் நேற்று மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாளி ஆலயத்தில் விகாஸ் துபே கைது செய்யப்பட்டான்.    அவனை இன்று அதிகாலை கான்பூருக்கு உத்தரப்பிரதேச் மாநில காவல்துறையினர் ஒரு வாகனத்தில் அழைத்துச் சென்றனர்.

கான்பூருக்குச் செல்லும் வழியில் ஜீப் உருண்டு விபத்துக்குள்ளானது.  அந்த விபத்தைப் பயன்படுத்தித் தப்ப முயன்ற ரவுடி விகாஸ் துபேவை துப்பாக்கியால் சுட்டுப் பிடித்ததாகக் கூறப்படுகிறது.  காயமடைந்த அவனை மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றுள்ளதாகவும் அங்கு விகாஸ் துபே மரணமடைந்ததாக உறுதி செய்யப்பட்டதாகவும் செய்திகள் வந்துள்ளன.