டில்லி:

ச்சநீதி மன்றத்தில் காவிரி வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, காவரி தொடர்பான வரைவு திட்ட அறிக்கையை மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்தார்.

ஏற்கனவே கடந்த 8ந்தேதி நடைபெற்ற விசாரணையின்போது, காவிரி தேர்தலை கருத்தில்கொண்டு மேலும் அவகாசம் கோரி மத்தி யஅரசு மனு தாக்கல் செய்தது. அப்போது, வரும் 14ந்தேதி (இன்று)க்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதி மன்றம், அப்போது மத்திய  நீர்வளத்துறை செயலாளரார் ஆஜராகி, காவிரி வரைவு திட்டத்தை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவித்தது.

இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது,  மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங் உச்சநீதிமன்றத்தில் ஆஜராகி, காவிரி வரைவு செயல் திட்டத்தை தாக்கல் செய்தார். அதைத்தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

முன்னாதாக இன்று காலையிலேயே உச்சநீதி மன்றம் வந்த  மத்திய நீர்வளத்துறை செயலாளர் யு.பி.சிங், இன்றைய விசாரணையின்போது நீதிமன்றத்தில்  ஆஜர் ஆகி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான செயல்திட்டத்தை தாக்கல் செய்ய முன்னேற்பாடுகளை செய்து வந்தார்.