கான்பூர்: உத்தரப்பிரதேசத்தில் சரக்கு ரயிலின் 6 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

கஸ்கஞ்ச் – பருகாபாத் வழித்தடத்தில் இன்று அதிகாலை 4 மணியளவில் ஒரு சரக்கு ரயிலின் ஆறு பெட்டிகள் தடம் புரண்டது. இந்த விபத்தில் யாரும் காயமடையவில்லை.

இது குறித்து கஸ்கஞ்ச் ரயில் நிலைய மேலாளர் பிஎஸ் மீனா கூறியதாவது: கான்பூரில் இருந்து மதுரா நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு ரயில் விபத்துக்குள்ளானது.

மூத்த அதிகாரிகளின் மேற்பார்வையில் வழித்தடத்தை சீரமைக்கும் பணிகள் தொடங்கி உள்ளன. அவ்வழியே வந்த பாகல்பூர் – காந்திதம் ரயில் மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டது என்று கூறினார். சரக்கு ரயில் விபத்து விசாரணை நடத்தப்படும் என்று ரயில்வே துறை மூத்த அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.