டில்லி:

கடந்த 2016ம் ஆண்டில் தேசிய அளவில் உ.பி.,யில் தான் அதிகளவு குற்ற செயல்கள் நடந்துள்ளதாக தேசிய குற்ற ஆவண காப்பகம் தெரிவித்துள்ளது.

இது வெளியிடப்பட்டுள்ள செய்திகுறிப்பில், ‘‘ 2016ம் ஆண்டில் உ.பி.,யில் 4 ஆயிரத்து 889 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது தேசிய அளவில் 16.1 சதவீதமாகும். இதற்கு அடுத்த இடத்தில் பீகாரில் 2 ஆயிரத்து 581 கொலை வழக்குகள் பதிவாகியுள்ளன. இது 8.4 சதவீதமாகும். பெண்களுக்கு எதிரான குற்றங்களில் உ.பி.யில் 49 ஆயிரத்து 262 வழக்குகளும் (14.5%) மேற்கு வங்கத்தில் 32 ஆயிரத்து 513 வழக்குகளும் (9.6%) பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் 38 ஆயிரத்து 947 பாலியல் பலாத்கார வழக்குகள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில், 2015ம் ஆண்டில் 34 ஆயிரத்து 651 வழக்குகள் பதிவாகியிருந்தன. பாலியல் பலாத்காரம் தொடர்பாக மத்தயி பிரதேசத்தில் 4 ஆயிரத்து 882, உ.பி.யில் 4 ஆயிரத்து 816, மகாராஷ்டிராவில் 4 ஆயிரத்து 189 வழக்குகள் பதிவாகியுள்ளன.

நாடு முழுவதும் குற்ற சம்பவங்கள் தொடர்பாக 37 லட்சத்து 37 ஆயிரத்து 870 பேர் கைது செய்யப்பட்டனர். 32 லட்சத்து 71 ஆயிரத்து 262 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 7 லட்சத்து 94 ஆயிரத்து 616 பேர் மீதான குற்றங்கள் நிருபிக்கப்பட்டன. 11 லட்சத்து 48 ஆயிரத்து 824 பேர் விடுதலை செய்யப்பட்டனர்’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.