தீவிரவாதி  அறையில் ஐஎஸ் கொடிகள்-போலீஸார் அதிர்ச்சி

லக்னோ-

த்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கரவாதி கொல்லப்பட்ட இடத்தில் ஐஎஸ் தீவிரவாத கொடிகள் இருந்த தாக  தகவல் வெளியாகி உள்ளது.

மத்திய பிரதேசத்தில் ரெயிலில் குண்டு வெடித்ததில் தொடர்புடைய ஐ.எஸ். பயங்கரவாதி முகமது சைபுல்லை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் சுட்டுக் கொன்றனர்.

முகம்மது சைபுலை சுற்றி வளைத்த பயங்கரவாத தடுப்பு படை அவனை சரண் அடையுமாறு கேட்டது. ஆனால் அவன் வீட்டின் கதவை பூட்டிக்கொண்டு போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினான். சுமார் 12 மணி நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் பயங்கரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்டான். இவன் ஐ.எஸ். பயங்கரவாதத்துடன் தொடர்புடையன் என்பதற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாக கூறப்படுகிறது.

தீவிரவாதி முகமது சைபுல் கொல்லப்பட்ட அறையில் இருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் பொருட்கள், கத்திகள் என பல்வேறு ஆயுதங்களை போலீஸார் பறிமுதல் செய்தனர்.

மேலும் கடவுச்சீட்டுகள் மற்றும் ஐ.எஸ். பயங்கரவாத கொடி உள்ளிட்டவைகளும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாகவும், தீவிரவாதி முகமது சைபுல் தங்கியிருந்த அறையில் ரெயில்களின் கால அட்டவணை அடங்கிய தகவல்களும் கண்டுபிடிக்கப்பட்டதாகவும்  போலீசார் தெரிவித்தனர்.

 

 

Leave a Reply

Your email address will not be published.