உ.பி.:  சிறையில் பிரபல தாதா சுட்டுக்கொலை

உத்தரபிரதேச மாநிலத்தில் பாக்பட் சிறைச்சாலையில்   பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி சுட்டுக் கொலை செய்யபட்டார்.

 

 

1990ம் ஆண்டுகளில்   உ.பி.யில் ஆதிக்கம் செலுத்தியவர்   பிரபல தாதா முன்னா பஜ்ரங்கி. இவர்  பாக்பாட்  சிறைச்சாலையில்  அடைக்கப்பட்டுள்ளார். இவர், ஒரு கொலை மிரட்டல் வழக்குக்காக  பாக்பட்டில் இருந்து  ஜான்சிக்கு மாற்றப்பட இருந்தார்.

இன்று காலை 5.30 மணி அளவில் அவருக்கு டீ கொடுக்கும் போது  அவர் சுட்டுக்கொல்லபட்டு உள்ளார்.

இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த  உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டு இருக்கிறார்.

சிறைச்சாலை வளாகத்திற்குள் நடந்த இந்த கொலை அதிர்ச்சி அளிக்கிறது. இதில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், ‘என்று முதல்வர் யோகி ஆதித்யநாத்  செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.

காசிபூரில் பாஜக சட்டமன்ற உறுப்பினர் கிருஷ்ணன் ராய் 2005 ல் கொலை செய்யப்பட்டதில் முக்கிய குற்றவாளியாக பஜ்ரங்கி இருந்தார்.

சில தினங்களுக்கு முன்  பஜ்ரங்கியின்   மனைவி சீமா சிங்  தனது கணவரை  போலி என்கவுண்டரில் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டபடுவதாக குற்றம்சாட்டி இருந்தார். அவர் குற்றம்சாட்டிய   சில தினங்களில்    இந்த கொலை நடந்திருக்கிறது.