உ.பி.: இன்று இறுதிக்கட்ட தேர்தல் தொடங்கியது!

 லக்னோ,

.பி.யில் இன்று இறுதி கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. அதையொட்டி தேர்தல் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவின் பெரிய மாநிலமான உத்தரபிரதேச சட்டமன்ற தேர்தல் நடைபெற்று வருகிறது. மொத்தம் 403 தொகுதிகள் உள்ள உத்தரப்பிரதேசத்தில், கடந்த மாதம் 11-ம் தேதி முதல், வரும் இன்று (மார்ச் 😎  வரை, 7 கட்டங்களாக தேர்தல் நடைபெற்று வருகிறது.

ஏற்கனவே 6 கட்ட தேர்தல் முடிவுற்ற நிலையில், இன்று 7வது கட்டமான இறுதி கட்ட தேர்தல் நடைபெறுகிறது.

இநத தேர்தல் காஷிபுர், வாரணாசி, சாந்துலி, மிர்ஷாபுர் மாவட்டங்களை சேர்ந்த 40 தொகுதிகளில் நடைபெறுகிறது.

இன்று நடைபெறும் 40 தொகுதிகளில் 535 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

உ.பி. மாநிலத்தில் ஆட்சியை பிடிக்க கடும் போட்டி நிலவுகிறது. தற்போது ஆட்சிபுரியும் சமாஜ்வாதி கட்சி காங்கிரசுடன் கூட்டணி சேர்ந்து தேர்தலை சந்திக்கிறது. பாரதியஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி ஆகியவையும் கடும் நெருக்கடியை கொடுத்து வருகின்றன. அங்கு மும்முனை போட்டி நிலவி வருகிறது.

சமாஜ்வாதி, காங்கிரஸ், பகுஜன்  மற்றும் பாரதிய ஜனதா  கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள்  ஆட்சியை பிடிக்க தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தனர். நேற்று முன்தினம் பிரசாரம் ஓய்வுபெற்றது.

அதையடுத்து  இன்று காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள்  வாக்களிக்க வாக்குச்சாவடி நோக்கி வந்தவண்ணம் உள்ளனர்.

இறுதிகட்ட தேர்தலையொட்டி தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

Leave a Reply

Your email address will not be published.