ஹம்சா பின்லேடன் குறித்து துப்புக்கொடுத்தால் ரூ.7 கோடி பரிசு: அமெரிக்கா அறிவிப்பு

வாஷிங்டன்:

பிரபல பயங்கரவாத அமைப்பான அல்கொத்யா அமைப்பின் தற்போதைய தலைவரான பின்லேடனின் மகன் ஹம்சா பின்லேடன் குறித்து துப்பு கொடுத்தார் 1 மில்லியன் டாலர் அதாவது இந்திய மதிப்பில் ரூ.7 கோடி பரிசு வழங்கப்படும் என்று அமெரிக்க புலனாய்வுத்துறை அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.

அமெரிக்காவின் இரட்டை கோபுரத்தை விமானங்கள் மூலம் தாக்கி உலக நாடுகளை அச்சுறுத்தி யது அல்கொய்தா பயங்கரவாத அமைப்பு. இந்த பயங்கரவாத அமைப்பின் தலைவனாக ஒசாமா பின்லேடன் இருந்து வந்தார். அவரை  கடந்த 2011-ம் ஆண்டு மே மாதம் பாகிஸ்தானில் உள்ள அபோடாபாத் நகரில், பாகிஸ்தானுக்கு தெரியாமலேயே, அமெரிக்க ராணுவம்,  பின்லேடன் சுட்டுக்கொன்றது.

இதையடுத்து அமெரிக்கா மீது கடும் கோபத்தில் உள்ள அல்கொய்தா அமைப்பு அமெரிக்காவை பழி வாங்க காத்துக்கொண்டுள்ளது.  தனது தந்தையை கொன்றதற்காக அமெரிக்காவையும், அமெரிக்கர்களையும் பழிக்குப்பழி வாங்குவேன் என ஒசாமா பின்லேடனின் மகனான ஹம்ஸா பின்லேடன் சவால் விட்டிருந்தார்.

தற்போது  அல்கொய்தா இயக்கத்தின் தலைவராகவும், அல்கொய்தா பயங்கரவாத இயக்கத்தின் இளவரசராகவும்   ஹம்ஸா பின்லேடன் இருந்து வருவதாக கூறப்படுகிறது. அவரையும், அமெரிக்கா சர்வதேச பயங்கரவாதியாக அறிவித்துள்ளது. அவரை அமெரிக்கா உள்பட சில நாடுகள் தேடி வருகின்றன.

இந்த நிலையில்,, ஹம்ஸா பின்லேடனின் வசிப்பிடம் பற்றி தகவல் கொடுப்பவர்களுக்கு 1 மில்லியன் அமெரிக்க டாலர்கள் (இந்திய ரூபாய் மதிப்பில் சுமார் ரூ.7,09 கோடி) பரிசாக வழங்கப்படும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: al-Qa'ida leader., Hamza bin Laden, Hamza is son of Usama bin Laden, HamzaBinLaden, OsamaBinLadenSon, United States, அமெரிக்கா, அல்கொய்தா, ஒசாமா பின்லேடன், ரூ.7 கோடி பரிசு, ஹம்சா பின்லேடன்
-=-