லக்னோ:

‘‘மாநிலம் முழுவதும் அரசியல்வாதிகள், அரசியல் கட்சிகளின் தொண்டர்கள் மீதான 20 ஆயிரம் கிரிமினில் வழக்குகள் வாபஸ் பெறப்படும்’’ என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில் அறிவித்தார்.

‘‘நிலுவையில் உள்ள வழக்குகளை பைசல் செய்யும் நடவடிக்கையாக இது மேற்கொள்ளப்படுகிறது. தர்ணா போராட்டம் நடத்திய மக்கள் பிரதிநிதிகள் மீது வழக்கு மற்றும் இது போன்று பதிவு செய்யப்பட்டுள்ள பெட்டி கேஸ்கள் வாபஸ் பெறப்படும்’’ என்று தெரிவித்துள்ளார். இந்த வகையில் மாநிலம் முழுவதும் 20 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது.

இதற்கு ஏற்ப சட்டத் திருத்தம் மேற்கொள்ள முன்னதாக நடந்த அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. வழக்கு வாபஸ் பெறுவதற்கு முன்பு மாஜிஸ்திரேட் முன்னிலையில் நன்னடத்தை பத்திரம் சமர்ப்பிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.