உன்னாவ் மைனர் பெண் கற்பழிப்பு: பா.ஜ.க எம்எல்ஏ மீது சி.பி.ஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல்

லக்னோ:

நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய  உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண் கற்பழிப்பு விவகாரத் தில் கைது செய்யப்பட்ட பாஜக எம்எல்ஏ மீது சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

உத்திரப்பிரதேசம் மாநிலம், உன்னாவ் பகுதியை சேர்ந்த பெண், தன்னை கற்பழித்த பாஜ எம்எல்ஏ மீது காவல்துறையில் புகார் செய்தும், நடவடிக்கை எடுக்கப்படாததால், பா.ஜ.க எம்.எல்.ஏ குல்திப் சிங் மற்றும் அவரது சகோதரர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி  உ.பி. மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் வீடு முன்பு தனது தந்தையுடன் தீக்குளிக்க முயன்றார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதையடுத்து, அந்த சிறுமியின் தந்தை பாஜக எம்எல்ஏவின் ஆதரவாளர்களால் தாக்கப்பட்ட நிலை யில், உயிரிழந்ததார். இது பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியது. பாதிக்கப்பட்ட பெண் நீதிபதி முன்னிலையில் வாக்குமூலம் அளித்தார்.

இந்த விவகாம் குறித்து சுமோட்டோ வழக்கு பதிவு செய்த, அலகாபாத் உயர்நீதி மன்றம், காவல் துறை மீது சாட்டையை சுழற்றியது.  இதைத்தொடர்ந்து குற்றவாளியான பாஜக எம்எல்ஏ குல்திப் சிங் கைது செய்யப்பட்டார். மேலும், வழக்கை மாநில அரசு சிபிஐவிசாரணைக்கு மாற்றியது.

வழக்கை விசாரித்த சிபிஐ, குல்தீப் சிங் மீது 17 வயது மைனர் பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்தது நிரூபணம் ஆகி உள்ளதாகவும், சிறுமியின் தந்தை, காவல்நிலையத்தில் வைத்தே, பாஜக எம்எல்ஏ குல்தீப் சிங்கின் சகோதரர் மற்றும் அவர் கூட்டாளிகளால் தாக்கப்பட்டு மருத்துவமனை யில்  மரணம் அடைந்துள்ளதும்  நிரூபிக்கப் பட்டுள்ளது என்று கூறியிருந்த நிலையில், பா.ஜ.க எம்எல்ஏ குல்திப் சிங் மீது சி.பி.ஐ இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது.