மும்பை,

மும்பையில் நடைபெற்ற வர்த்தக சபை கூட்டத்தில் பேசிய முன்னாள் மத்திய நிதி அமைச்சர் சிதம்பரம், பா.ஜ.க. உ.பி., உத்தரகாண்டில் வெற்றி பெற்றுள்ளதுர, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைகக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் அல்ல என்று கூறினார்.

மேலும், பிரதமர் மோடி ஆளுமைத்திறன் மிகுந்த அரசியல் தலைவராக உருவெடுத்திருக்கிறார் என்றும் கூறினார்.

நேற்று நடைபெற்ற இந்திய வர்த்தக சபைக் கூட்டத்தில் கலந்துகொண்டு முன்னாள் நிதி அமைச்சர் ப.சிதம்பரம்  பேசியதாவது,

நடைபெற்று முடிந்த 5 மாநில சட்டப்பேரவை தேர்தலில் உபி.,  உத்தரகாண்டில் பாஜ வெற்றி பெற்றுள்ளது. இதன் காரணமாக  மாநிலங்களவையில் அக்கட்சியின் பலம் அதிகரிக்கும் என்றார்.

இதன் காரணமாக,   மக்களவையைப் போன்றே மாநிலங்களவையிலும் பாஜகவுக்கு பெரும் பான்மை கிடைத்தால், அவர்களால்  எந்த மசோதாவை வேண்டுமானாலும் இலகுவாக நிறை வேற்ற முடியும். இனி எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு மதிப்பு இருக்காது என்று கூறினார்

எனினும், தற்போது உள்ள அரசியல் சூழலில், நாட்டின் உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சியை (ஜிடிபி) 8 சதவீதமாக அதிகரிக்க முடியும். ஆனால், அதனை மத்திய அரசு சாத்தியமாக்குமா? என்பது தெரியவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

தற்போது வெளியாகியுள்ள தேர்தல் முடிவுகளை வைத்துப் பார்க்கும்போது நாட்டின் ஆளுமை மிக்க அரசியல் சக்தியாக பிரதமர் மோடி உருவெடுத்துள்ளார் என்பது தெரிகிறது. தேசம் முழுவதும் செல்வாக்கு பெற்றவராக அவர் உள்ளார் என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றியிருப்பதை, ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கைக்கு மக்கள் கொடுத்த அங்கீகாரம் என்று காரணம் கற்பிக்க இயலாது. இந்த வெற்றியின் பின்னணியில் பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. எனவே, ரூபாய் நோட்டு வாபஸ் மீதான பொது வாக்கெடுப்பாக இந்தத் தேர்தல் முடிவைப் பார்க்கக் கூடாது.

இவ்வாறு சிதம்பரம் பேசினார்.