உத்தரப்பிரதேச பெண் அமைச்சர் கமல் ராணி வருண் கொரோனாவால் மரணம்

க்னோ

த்தரப்பிரதேச மாநில பெண் அமைச்சர் கமல் ராணி வருண் கொரோனாவால் உயிர் இழந்துள்ளார்.

 

உத்தரப்பிரதேச மாநிலம் யோகி ஆதித்யநாத் அமைச்சரவையில் பெண் அமைச்சர் கமல் ராணி வருண் இடம் பெற்றுள்ளார்.

சுமார் 62 வயதாகும் இவர் தொழில்நுட்ப கல்வித்துறை அமைச்சராக உள்ளார்,

இவருக்குக் கடந்த 18 ஆம் தேதி அன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

அவர் லக்னோ நகரில் உள்ள பிஜிஐ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

சிகிச்சை பலன் அளிக்காமல் அவர் இன்று உயிர் இழந்தார்.

கமல் ராணி வருண் மரணத்துக்குப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றன.

இவர் மரணத்தையொட்டி முதல்வர் யோகி தனது அயோத்தி பயணத்தை ரத்து செய்துள்ளார்.

அவர் ராமர் கோவில் அடிக்கல் நாட்டு விழா ஏற்பாடுகளை ஆய்வு செய்யச் செல்ல இருந்தார்.

கார்ட்டூன் கேலரி