தமாகா.வுக்கு இனி வரும் காலங்கள் வசந்த காலமே-…. ஜி.கே.வாசன் பேச்சு

--

திருச்சி:

திருச்சியில் தமாகா 4ம் ஆண்டு விழா பொதுக்கூட்டம் இன்று நடந்தது. இதில் ஜி.கே.வாசன் பேசுகையில், ‘‘கடந்த 3 ஆண்டு மத்திய பா.ஜ.க அரசின் பண மதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி போன்ற பிரச்சினைகளால் மக்கள் பெரும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.

புதிய வேலைவாய்ப்பு, கருப்பு பணம், விவசாய பிரச்சினை, விலைவாசி போன்ற பிரச்சினைகளில் மூன்றரை ஆண்டு கால பா.ஜ.கவின் ஆட்சி மக்களுக்கு பயனாக இல்லை-ஜி.கே.வாசன்.

தமிழக அரசு தனது அதிகாரத்தை மத்திய அரசிடம் இழந்து நிற்கிறது-. மறைந்த முதல்வர் ஜெயலலிதா தான் இருந்த இடத்திலிருந்தே தமிழகத்திற்கு வேண்டியதை பெற்று தந்தார். மாறாக தற்போது ஆட்சியிலிருப்பவர்கள் டெல்லிக்கு நடையாய் நடந்தும் தமிழகத்திற்கு எதுவும் கிடைப்பதில்லை-

மாநில அரசும் தமிழக மக்களின் நியாய விலைக்கடையில் பொருட்கள் கிடைப்பதில்லை. விலைவாசி உயர்வை தடுக்கவில்லை-ஜி.கே.வாசன். மதுவில்லா தமிழகம், மணல் கொள்ளை, இலவச கல்வி, தரமான மருத்துவம், சாதி-மத மோதல்கள் இல்லாத தமிழகம் போன்றவற்றை த.மா.கா உருவாக்கும். தமாகா.வுக்கு இனி வரும் காலங்கள் வசந்த காலமே-’’ என்றார்.