‘மாஸ்டர்’ படத்தின் டிரைலர் அப்டேட்……!

நடிகர் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகியுள்ள படம் மாஸ்டர்.

இந்த படம் ஏப்ரல் மாதமே ரிலீஸாக் வேண்டியது. கொரோனா காரணமாக தள்ளிப்போய் கொண்டே உள்ளது.

இப்படத்தின் டீசர் நவம்பர் 14 ஆம் தேதி தீபாவளி அன்று வெளியானது.மாஸ்டர் டீசர் வெளியான 16 மணி நேரத்தில் 16 மில்லியன் பார்வைகளைப் பெற்றிருப்பதாகவும், 1.6 மில்லியன் லைக்ஸ்களைப் பெற்றிருப்பதாகவும் படத்தின் தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது .

இந்நிலையில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகியுள்ள நிலையில் மாஸ்டர் படத்தின் டிரைலர் இப்போது பரபரப்பாக ரெடியாகியுள்ளதாகவும், கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு இணையத்திலும் திரையரங்குகளிலும் வெளியாகும் எனவும் சொல்லப்படுகிறது.