விக்ரமின் ‘துருவ நட்சத்திரம் ‘ படம் குறித்த அப்டேட்….!

விக்ரம் நடிப்பில் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் படம் துருவ நட்சத்திரம். இதில் சிம்ரன், ராதிகா, டிடி, பார்த்திபன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்தின் பெரும்பாலான காட்சிகள் வெளிநாட்டில் எடுக்கப்பட்டுள்ளன.

படம் ஆரம்பிக்கப்பட்டு மூன்று ஆண்டுகளுக்கு மேலாகிறது. ஆனால் இன்னும் அந்த படத்தை ரிலிஸ் செய்ய முடியாமல் பணப்பிரச்சனைகளில் சிக்கியுள்ளார் தயாரிப்பாளரும் இயக்குனருமான கௌதம் மேனன்.

இந்நிலையில் அந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஒரு மனம் என்ற சிங்கிள் பாடலை விரைவில் ரிலிஸ் செய்யவுள்ளதாக அறிவித்துள்ளார் கௌதம் மேனன். இதன் மூலம் படத்தின் ரிலீஸ் வேலைகளை அவர் ஆரம்பித்து விட்டதாக சொல்லப்படுகிறது.