சென்னையில் இன்று பெட்ரோல் விலை, லிட்டருக்கு ரூ.77.29 காசுகளாகவும், டீசல் விலை, லிட்டருக்கு ரூ.69.59 காசுகளாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல், டீசல் விலையை தினந்தோறும் நிர்ணயிக்க எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்தது. அதன்படி, தினமும் பெட்ரோல், டீசல் விலை நிர்ணயிக்கப்ப்டடு வருகிறது.

இது தொடர்பாக எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ”சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையிலிருந்து 16 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.29 ஆகவும், டீசல், நான்காவது நாளாக விலையில் மாற்றமின்றி லிட்டர் ரூ.69.59 ஆகவும் உள்ளது. இந்த விலை இன்று காலை முதல் அமலுக்கு வந்தது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.