சமூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம்: திருச்சியில் வாலிபர் கைது

திருச்சி:

மூகவலைதளத்தில் குழந்தைகள் ஆபாச படம் பதிவேற்றம் செய்ததாக திருச்சியில் வாலிபர் ஒருவரை சைபர் கிரைம் காவல்துறையினர்  கைது செய்துள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போலியான பெயரில் அவர் ஆபாச படம், வீடியோக்களை முகநூலில் பதிவேற்றியதாக குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.

குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பார்ப்பதும் சமூகவலைதளங்களில் பதிவேற்றம் செய்வதும் குற்றம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. அதன்படி, வலைதளங்கள் கண்காணிக்கப் பட்டு வருகின்றன.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு  ஏடிஜிபி ரவி கூறும்போது, தமிழகத்திலும் ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்யப்படுகிறது என்றும், 7 பேரை கண்காணித்து வருவதாகவும் கூறியிருந்தார்.

இந்த நிலையில், ஆபாசப் படங்கள் பதிவேற்றம் செய்பவர்களை கண்டுபிடிக்கும் வகையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த தனிப்படையினர்,  திருச்சியை சேர்ந்த ஏ.சி.மெக்கானிக் கிறிஸ்டோபர் அல்போன்ஸ்ராஜ் என்பவரை கைது செய்துள்ளனர்.

இவல்,  நிலவன் ஆதவன்  என்ற போலி பயனர் கணக்கு மூலம், முகநூலில், குழந்தைகளின் ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்துள்ளது தெரிய வந்ததாகவும், மேலும் கடந்த 2 ஆண்டுகளாக இதுகுறித்து ஏடிஜிபி ரவி கூறுகையில் ஏராளமான ஆபாச வீடியோக்களை பதிவேற்றம் செய்து உள்ளதும் தெரிய வந்துள்ளதாக,  ஏடிஜிபி ரவி  தெரிவித்து உள்ளார்.

இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.