விஜய்சேதுபதியின் ‘உப்பெண்ணா’ படத்தின் மேக்கிங் வீடியோ வெளியீடு….!

சிரஞ்சீவியின் குடும்பத்தில் இருந்து புதிதாக உருவெடுத்துள்ள ஹீரோ Panja vaishnav tej. இவர் நடிக்கும் முதல் படத்தை Buchi Babu Sana இயக்குகிறார்.

ஆக்ஷன் மற்றும் காதல் என கலர்ஃபுல்லாக இந்த படம் உருவாகி வருகிறது. மீனவர்கள் சமுதாயத்தில் நடப்பது போல் இந்த கதை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி வில்லனாக நடிக்கிறார். இந்த படத்திற்கு உப்பெண்ணா என்று படக்குழுவினர் பெயரிட்டுள்ளனர். இந்த படத்தின் இரண்டு பாடல்கள் மற்றும் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தன.

இந்த படம் வெளியாகி பலரது பாராட்டையும் பெற்று வருகிறது. இந்த படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்றை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.