Random image

உத்தரபிரதேசம்: உயர்ஜாதி மக்கள் தான் என்னை எம்எல்ஏ ஆக்கினர்….பாஜக எம்எல்ஏ பரபரப்பு பேச்சு

லக்னோ:

உயர்ஜாதியினர் தான் என்னை எம்எல்ஏ ஆக்கினர். இஸ்லாமியர்களோ அல்லது தலித்களோ இதை செய்யவில்லை என்று உத்தரபிரதேச பாஜக எம்எல்ஏ வெளிப்படையாக பேசிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுதுதியுள்ளது.

உத்தரபிரதேச மாநிலம் பயிரியா தொகுதி பாஜக எம்எல்ஏ சுரேந்திர சிங். இவர் இன்று நடந்த முழு அடைப்புக்கு தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.

அப்போது அவர் பேசுகையில்,‘‘உயர் ஜாதி மக்கள் தான் என்னை எம்எல்ஏ ஆக்கினார்கள். இஸ்லாமியர்களோ அல்லது தலித்களோ என்னை எம்எல்ஏ ஆக்கவில்லை. அதனால் உயர் ஜாதியினருக்காக எந்த தியாகத்தையும் செய்ய தயாராக இருக்கிறேன். உயர் ஜாதியில் உள்ள எனது ஆதரவாளர்கள் கேட்டுக் கொண்டால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்யவும் தயங்கமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.