சட்டசபை அமளி: ஜனாதிபதியை சந்திக்கிறார் மு.க.ஸ்டாலின்!

சென்னை,

ட்டசபையில் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மையை நிரூபிக்க நடைபெற்ற வாக்கெடுப்பின்போது ஏற்பட்ட பிரச்சினைகளால் திமுக செயல்தலைவரும், எதிர்க்கட்சி தலைவருமான ஸ்டாலின் சபைக்காவலர்களால் தாக்கப்பட்டார்.

மேலும், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சிகளை வெளியேற்றிவிட்டு, அதிமுகவினர் மட்டுமே கலந்துகொண்ட வாக்கெடுப்பு நடைபெற்றது. இதன் காரணமாக எடப்பாடி வெற்றி பெற்றதாக சட்டசபை சபாநாயகர் அறிவித்தார்.

சபாநாயகரின் ஒருதலைப்பட்சமான முடிவு குறித்து எதிர்க்கட்சி தலைவர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து புகார் கூறினார். மேலும் சென்னை கடற்கரையில் போராட்டம் நடத்தினார். இதன் காரணமாக அவர் கைது செய்யப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.

தமிழக சட்டசபையில் நம்பிக்கை ஓட்டெடுப்பின் போது நடந்த சம்பவங்கள் குறித்து புகார் அளிக்க ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்திக்க நேரம் கேட்கப்பபட்டது.

தற்போது வரும் 23ந்தேதி மாலை ஸ்டாலினை சந்திக்க ஜனாதிபதி நேரம் ஒதுக்கியிருக்கிறார். இதன் காரணமாக தமிழக  எதிர்கட்சி தலைவர் ஸ்டாலின் பிப்.23 ம் தேதி மாலை பிரனாப் முகர்ஜியை சந்தித்து பேச இருக்கிறார். அப்போது அவருடன் தி.மு.க., எம்.பி.,க்கள் மற்றும் மூத்த நிர்வாகிகள் உடன் செல்ல இருப்பதாக கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி