மக்களவையில் அமளி: 5 நாட்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்ட அதிமுக எம்.பிக்கள்

டில்லி

க்களவையில் மேகதாது விவகாரம் தொடர்பாக தொடர் அமளியில் ஈடுபட்டு வந்ததால்  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்க;ள 26 பேரை  மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் சஸ்பெண்ட் செய்துள்ளார்.

மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்டுவது தொடர்பாக  மத்திய அரசு அனுமதி வழங்கி யதை எதிர்த்து தமிழக எம்.பி.க்கள் பாராளுமன்றத்தை முடக்கி வருகின்றனர்.  குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்து அதிமுக எம்.பிக்கள் தொடர் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், நேற்று  ரஃபேல் ஒப்பந்தம் தொடர்பான விவாதத்தின் போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி பேசிக்கொண்டிருந்தபோது அதிமுக எம்.பிக்கள் முழக்கமிட்டனர். அப்போது பேசிய ராகுல், அதிமுக எம்.பிக்கள் பின் நிர்மலா சீதாராமன் மறைந்திருப்பதாக விமர்சித்தார்.

இருப்பினும் அமளி தொடர்ந்ததால், அவை நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தியதாக கூறி சபாநாயகர் சுமித்ரா மகாஜன் 26 அதிமுக எம்.பிக்களை 5 நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்தார்.