டில்லி,
2017-ம் ஆண்டிற்கான முதல்-நிலை தேர்வு முன்கூட்டியே நடைபெறும் என யுபிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
2017-ம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வு முன்கூட்டியே ஜூன் மாதத்தில் நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

யுபிஎஸ்சி எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ஆண்டு தோறும் ஐஏஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ், ஐஆர்ஸ் உள்ளிட்ட உயர் பதவிகளுக்கான தேர்வை நடத்தி வருகிறது.
இதில் முதல்-நிலை தேர்வு, முதன்மை தேர்வு, நேர்முகத்தேர்வு என 3 கட்டங்களாக தேர்வுகளை நடத்தி வருகிறது.
இதில் முதல்-நிலை தேர்வு  ஆகஸ்ட் மாதத்தில் நடத்தபடுவது வழக்கம்.
இந்நிலையில் 2017-ம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வு ஜூன் மாதத்திலேயே நடைபெறும் என்று யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.
கடந்த 2014, 2015, 2016ம் ஆண்டுகளில் முதல்நிலைத் தேர்வு ஆகஸ்ட் மாதத்தில் நடத்தப்பட்டது.
விரைவாக தேர்வுப் பணிகளை நடத்தி முடிக்கும் வகையில், 2017-ம் ஆண்டிற்கான முதல்நிலை தேர்வை வரும் ஜூன் மாதத்திலேயே நடத்தி முடிக்க யுபிஎஸ்சி திட்டமிட்டுள்ளது.