யுபிஎஸ்சி தேர்வு முடிவு: தமிழக மாணவர் தர்மபுரி கீர்த்திவாசன் 29-வது இடம்

டில்லி:

டந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி (இந்திய குடிமைப் பணிகள்) தேர்வு முடிவுகள் நேற்று இரவு வெளியிடப்பட்டது.

இதில் ஐதராபாத்தைச் சேர்ந்த அனுதீப் துரிஷெட்டி முதலிடம் பிடித்துள்ள  நிலையில் தமிழகத்தை சேர்ந்த கீர்த்திவாசன் 29 வது இடம் பிடித்துள்ளார். இவர்  இந்திய அளவில் 29-வது இடமும், தமிழக அளவில் முதலிடமும் பிடித்துள்ளார். இவர் தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்.

கடந்த ஆண்டு நடைபெற்ற யுபிஎஸ்சி தேர்வில்  நாடு முழுவதிலும் இருந்து 2500 பேர் பங்கேற்ற இந்த இறுதித் தேர்வில், 990 பேர் தகுதி பெற்றவர்களாக யுபிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதில் தமிழகத்தைச் சேர்ந்த கீர்த்தி வாசன் என்பவர் அகில இந்திய அளவில் 29 ஆவது இடத்தை பிடித்துள்ளார். இவர்  திருச்சி என்.ஐ.டி.-யில் பி.டெக். படித்துள்ளார். சிவில்  பட்டதாரியான கீர்த்தி வாசன் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.