டில்லி

குடிமைப் பணிகளுக்கான தேர்வான ஐஏஎஸ் மற்றும் ஐபிஎஸ் தேர்வுகள் முடிவு வெளியாகி உள்ளன.

மத்திய அரசு தேர்வாணையம் குடிமைப்பணிகளுக்கான காலி இடங்களை நிரப்ப ஓவ்வொரு அண்டும் தேர்வுகளை நடத்தி வருகிறது. இந்த தேர்வு முதல் நிலை மற்றும் நேர்முக தேர்வு என இரு பிரிவுகளாக உள்ளன. முதல் நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் நேர்முகத் தேர்வு மூலம் இறுதியாக தேர்ச்சி பெறுகின்றனர். இந்த தேர்வு இந்தியா முழுமைக்குமான தேர்வாகும்.

கடந்த ஆண்டு மத்திய அரசு தேர்வாணையம் நடத்திய தேர்வில் லட்சக்கணக்கான மாணவர்கள் கலந்துக் கொண்டனர். இறுதியாக தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 755 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் முழு விவரம் வெளியாக வில்லை.

இது வரை வந்த விவரங்கள் பின் வருமாறு :

ஐஏஎஸ் பணிக்கு 180 பேர் தேர்வாகி உள்ளனர். இவர்களில் பொதுப்பிரிவினர் 91 பேர், பிற்படுத்தப்பட்டோர் 48 பேர் தாழ்த்தப்பட்டோர் 27 பேர் மற்றும் பழங்குடியினர் 14 பேர் அடங்குவார்கள்

இந்திய வெளியுறவு துறை பணியான ஐ எஃப் எஸ் பணிக்கு 30 (பொதுப்பிரிவு 15, பிற்படுத்தப்பட்டோர் 9 மற்றும் தாழ்த்தப்பட்டோர் 5 பேர் மற்றும் பழங்குடியினர் ஒருவர்) பேர் தேர்வாகி உள்ளனர். இதை போல் ஐபிஎஸ் தேர்வில் 150 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மொத்தத்தில் தமிழகத்தில் இருந்துமட்டும் 35 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சென்ற ஆண்டை விட குறைவாகும். அதே நேரத்தில் இந்தியா முழுவதும் வழக்கமாக 750 முதல் 900 வரை தேர்ச்சி பெறுவார்கள. ஆகவே அகில இந்திய அளவில் தேர்ச்சி குறையவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.