யுபிஎஸ்சி சிவில் சர்வீசஸ் தேர்வு முடிவுகள் அறிவிப்பு…! தமிழக மாணவர் அபாரம்

டெல்லி: யுபிஎஸ்சி தேர்வில் இந்திய அளவில் 7வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தை மாணவர் கணேஷ்குமார் பிடித்துள்ளார்.

யுபிஎஸ்சி மத்திய அரசின் பல்வேறு உயர்பணியிடங்களை தேர்வு மற்றும் நேர்காணல் நடத்தி நியமனம் செய்து வருகிறது. கடந்த ஆண்டு ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட 829 பணியிடங்களுக்கான சிவில் சர்வீசஸ் தேர்வு நடத்தப்பட்டது.

தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு கடந்த பிப்ரவரி மாதம் நேர்காணல் நடந்தது. அதன் முடிவுகள் இன்று வெளியிடப்பட்டது. இந்த தேர்வில் தமிழகத்தை சார்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் என்பவர் இந்திய அளவில் 7வது இடத்தையும், தமிழகத்தில் முதல் இடத்தை பிடித்துள்ளார்.

கணேஷ்குமார் பாஸ்கர்  கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நாகர்கோவிலை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. www.upsc.gov.in என்ற இணையதளத்தில் தேர்வு முடிவுகளை தெரிந்துகொள்ளலாம்.