பெங்களூரு:

கர்நாடகா மாநில முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா சில ஆண்டுகளுக்கு முன்பு காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகினார். பின்னர் பாஜக.வில் இணைந்தார். பாஜக.வில் அவருக்கு முக்கியத்துவம் அளிக்கப்படாமல் இருந்தது. இதனால் அவர் அரசியலில் இருந்து விலகி இருந்தார்.

இந்நிலையில் கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் மே 12ம் தேதி நடக்கிறது. இத்தேர்தலில் போட்டியிட தனது மகளுக்கு கிருஷ்ணா வாய்ப்பு கேட்டிருந்ததாக கூறப்படுகிறது. ஆனால், பாஜக தலைமை சீட் வழங்கவில்லை.

இதனால் அதிருப்தியில் உள்ள எஸ்.எம்.கிருஷ்ணா காங்கிரஸ் கட்சிக்கு திரும்ப முடிவு செய்திருப்பதாக அவரது ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். இது குறித்த கன்னட செய்தி சேனல் ஒன்று வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.