பத்மஸ்ரீ விருதை திரும்ப ஒப்படைக்க ஹாக்கி வீரர் மனைவி முடிவு…..மத்திய அரசு மீது அதிருப்தி

--

டில்லி:

இந்திய ஹாக்கி அணியில் இடம்பெற்றிருந்தவர் முகமது சாகித். இவர் 2016ம் ஆண்டு ஜூலை 20ம் தேதி இறந்துவிட்டார். 1980ம் ஆண்டில் மாஸ்கோவில் நடந்த ஒலிம்பிக் போட்டியில் இவரது திறமையான வி¬ளாட்டால் தங்க மெடல் கிடைத்தது. 1980&81ம் ஆண்டு அர்ஜூனா விருதும், 1986ம் ஆண்டில் பத்மஸ்ரீ விருதும் வழங்கப்பட்டது. இவருக்கு அளிக்கப்பட்ட விருதுகளை மத்திய அரசிடம் திருப்பி கொடுக்கப் போவதாக அவரது மனைவி பிரவின் சாகித் தெரிவித்துள்ளார்.

இது குறுத்து அவர் கூறுகையில்,‘‘ எனது கணவர் மரணமடைந்தபோது மத்திய, உத்தரபிரதேச மாநில அமைச்சர்கள் பலர் வந்தனர். அப்போது எனது கணவர் பெயரில் விளையாட்டு அரங்கம் அல்லது ஒரு போட்டி நடத்தப்படும் என்று வாக்குறுதி அளித்தனர். பிரதமரும் தனது வருத்தத்தை தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு வாக்குறுதி கூட இது நிறைவேற்றப்படவில்லை. அவர் பத்மஸ்ரீ, தங்கப்பதக்கம் வென்றுள்ளார். அதனால் அவர் பெயரில் ஒரு விளையாட்டு அரங்கமோ அல்லது ஒரு போட்டியோ தொடங்கப்படவில்லை என்பது வருத்தமாக இருக்கிறது.

இதன் பின்னர் இந்த விருதுகளுக்கு என்ன மரியாதை இருக்கிறது. சமீபத்தில் வாரனாசக்கு வந்த பிரதமர் மோடியை சந்திக்க முயற்சித்தேன். ஆனால், அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. எனது கணவரின் 2வது நினைவு நாளான வரும் 20ம் தேதி அவருக்கு வழங்கப்பட்ட பத்மஸ்ரீ, அர்ஜூனா விருதுகளை மத்திய அரசிடம் திரும்ப ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன். இது குறித்து பிரதமருக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது’’ என்றார்.

அவர் மேலும் கூறுகையில், ‘‘கடந்த ஆண்டு எனது கணவர் பிறந்தநாளை முன்னிட்டு அவரது பெயரில் நாங்கள் ஒரு போட்டி நடத்தினோம். எனக்கு கிடைத்த பணிக் கொடை தொகையில் இருந்து ரூ.3 லட்சம் ரூபாய் செலவு செய்தேன். இந்த தொகை திருப்பி கொடுக்கப்படும் என்று தெரிவித்தனர். ஆனால் இது வரை ஒரு பைசா கூட திருப்பி வழங்கவில்லை. முகமது இறக்கும் போது டீசல் ரெயில் பணிமனையில் பணியாற்றி வந்தார். அந்த பணியும் எனது மகனுக்கு வழங்கப்படவில்லை’’ என்றார்.