நடிகர்கள்: விஜய் குமார், சுதாகர், ஷங்கர் தாஸ்
இசை” கோவிந்த் வசந்தா
தயாரிப்பு: சூர்யா
எழுத்து & இயக்கம்: விஜய் குமார்

பல்வேறு நாடுகளில் தடை செய்யப்பட்ட பூச்சி கொல்லி மருந்து தயாரிக்கும் ஆலையை ஒரு சிறிய தமிழக கிராமத்தில் தொடங்குகிறார்கள். அதில் விஜய் குமார் , சுதாகர் மேலும் ஒரு புதுமுகம் மூவரும் அந்த ஆலையில் வேலைக்கு செல்கிறார்கள்.
அந்த ஆலை சரியாக பராமரிக்கப்படாததால் விஷவாயு தாக்கி ஒருவர் மரணமடைகிறார்.

அந்த விஷவாயு பரவி சுற்றுப் புற கிராமத்து மக்கள் சந்திக்கும் பிரச்சனைகள் , அதிலிருந்து அவர்கள் மீண்டு வந்தார்களா என்பது தான் இப்படத்தின் கதை

“ஆட்சி மாறினாலும் காட்சி மாறாது. அரசியல்ல நாம தலையிடலன்னா… அரசியல் நம்ம வாழ்க்கையில தலையிட்டுரும். கடவுள் கிட்ட நிஜமா இருனு வேண்டிக்கிறேன்.” உள்ளிட்ட வசனங்கள் நடக்கபோகிற இந்த தேர்தல் நேரத்தில் சற்று அனைவரையும் யோசிக்க வைக்கிறது.

சமூக அநீதி மட்டுமல்லாமல், ஜாதி அரசியலையும் வெளிப்படையாக காட்டியுள்ளார் இயக்குனர் விஜய் குமார். ஜாதி கட்சிகள் சூழலுக்கு ஏற்றவாறு எப்படி தங்களை மாற்றிக் கொண்டு மக்களை தூண்டிவிட்டு அவர்களை பலியாக்குகிறார்கள் என்பதை தெளிவாக காட்டியுள்ளார். மேலும் அரசியல்வாதிகள் தான் மக்களின் தலையெழுத்தை மாற்றுகிறார்கள் என்ற உண்மை தகவல் பதிவுசெய்துள்ளார்.