ஸ்தான்புல்

துருக்கியின் எதிர்கட்சித்தலைவர் கேமல் கிலிக்டரோக்லு நீதி கேட்டு அங்காராவிலிருந்து இஸ்தான்புல் வரை 450 கிமி பயணம் மேற்கொண்டுள்ளார்.

துருக்கியின் அதிபர் எர்டொகன்.  இவர் துருக்கியில் அவசர நிலை கடந்த வருடம் ஜூலை மாதம் பிரடனம் செய்தார்.  அதை எதிர்த்த 50000 க்கும் மேற்பட்டோர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், மற்றும்  சுமார் 1.4 லட்சம் பேர் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  அவர்களில் பல நீதியரசர்களும், எதிர்கட்சி பிரமுகர்களும் உள்ளனர்.

எதிர்க்கட்சியை சேர்ந்த பத்திரிகையாளர் எனிஸ். இவர் துருக்கியில் அதிக விற்பனையாகும் பத்திரிகையான ஹுரியத் தில் பணிபுரிந்து வந்தார்.  துருக்கியின் ராணுவ வாகனங்களில் சிரியாவுக்கு ஆயுதங்கள் கொண்டு செல்லும் காட்சியை புகைப்படமாக்கி தனது பத்திரிகையில் பிரசுரித்தார்.  அதற்காக அவர் கைது செய்யப்பட்டு 25 வருட சிறை தண்டனை விதிக்கப்பட்டது.  இதற்கு நாடெங்கும் எதிர்ப்பு கிளம்பியது.

இதை எதிர்த்து ADALET என பொறிக்கப்பட்ட டி சர்ட் அணிந்து எதிர்க்கட்சி தலைவர் கேமல் கிலிக்டரோக்லு தலைமையில் ஒரு நெடும் பயணம் நடக்கிறது.  துருக்கி மொழியில் ADALET என்றால் நீதி எனப் பொருள்.  இந்தப் பயணம் கடந்த ஜூன் 9ல் துவங்கியது.  ஜூலை 9 ஆம் தேதி இஸ்தான்புல் சிறை வாசலில் முடியும் எனவும், அறிவிக்கப்பட்டுள்ளது.  கேமல் நடத்தும் இந்தப் பயணம் காந்தியின் உப்புச் சத்தியாகிரகத்துடன் ஒப்பிடப் படுகிறது.  அது மட்டுமின்றி, கேமல் கிலிக்டரோக்லு வுக்கு காந்தி கேமல் என செல்லப் பெயர் இடப்பட்டுள்ளது.  ஆனால், எர்டோகன் இந்த பயணத்தில் ஈடுபடுபவர்களை பயங்கரவாதிகள் என குற்றம் சாட்டியுள்ளார்.

பயணம் செய்யும் கேமல், மற்றும் அவருடைய ஆதரவாளர்களை இஸ்தான்புல் நகருக்குள் அனுமத்திக்கப்பட மாட்டார்கள் என பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.  அதே நேரத்தில் அனுமதிக்காவிடில் அது உள்நாட்டுக் கலவரத்துக்கு வழி வகுக்கும் எனவும் அஞ்சுகின்றனர்