Random image

காலிறுதி சுற்றில் பலத்தை நிரூபிக்கும் முனைப்பில் உருகுவே – பிரான்ஸ் அணிகள்

உலக கோப்பை கால்பந்து போட்டி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் ரசிகர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளது. லீக் மற்றும் நாக் அவுட் சுற்றுகள் நிறைவடைந்த நிலையில் காலிறுதி சுற்றுக்கு 8 அணிகள் தகுதி பெற்றுள்ளன. கால் இறுதி சுற்றின் முதல் போட்டியில் பிரான்ஸ் மற்றும் உருகுவே அணிகள் மோத உள்ளன. ரஷ்யாவில் உள்ள நிஸ்னி நோவ்கரோட் மைதானத்தில் உள்ளூர் நேரப்படி இரவு 7.30 மணிக்கு போட்டிகள் தொடங்கப்பட உள்ளன.
france-vs-uruguay
உருகுவே அணியின் பலம்:

இரண்டு முறை உலக கோப்பையை வென்றுள்ள உருகுவே அணி லீக் சுற்றில் பங்கேற்ற 3 ஆட்டங்களிலும் வெற்றிப்பெற்று நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறியது. அதனை தொடர்ந்து நடைபெற்ற நாக் அவுட் சுற்றில் பலம் வாய்ந்த போர்ச்சுக்கள் அணியை வீழ்த்தி உலக கோப்பை போட்டிகளில் இருந்து வெளியேற்றியது. டிபன்ஸ் வீரர்கள் உருகுவே அணிக்கு பலமாக இருக்கின்றனர். டிபன்ஸ் வீரர்களை திசைத்திருப்பி கோல் அடிப்பது என்பது எதிரணியினருக்கு கடினமானதாக அமையும்.
Uruguay
உருகுவே அணியின் கேப்டன் டியுகோ கோடின், மராட்டின்,ஜோஸ், டியுகோ லாக்சால்ட் ஆகியோர் பலமிக்க டிபன்ஸ் வீரர்களாக உள்ளனர். இவர்களை எளிமையாக பிரான்ஸ் அணி வீரர்கள் தோற்கடிப்பது கடினமானதாகும். நாக் அவுட் சுற்றில் போர்ச்சிக்கல்லை எடின்சன் கவானி வீழ்த்தினார். இவரின் ஆட்டம் இந்த போட்டியில் எதிர்ப்பார்க்க கூடிய அளவில் இருக்க கூடும்.

இந்த போட்டி குறித்து உருகுவே அணியின் பயிற்சியாளரான ஆஸ்கர் தபாரெஸ் பேசியபோது “ பிரான்ஸ் அணியினரை வெற்றிக்கொள்ள நாங்கள் புதிய வியூகம் வகுத்துள்ளோம் “ என்று கூறினார்.

பிரான்ஸ் அணியின் பலம்:

அதேபோல் பிரான்ஸ் அணியின் நட்சத்திர வீரரான கிளியான மாப்பே அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணியினரை அச்சுறுத்துபவராக உள்ளார். இவருடன் இணைந்து பிரான்ஸ் அணியின் சக வீரர்கள் முயன்றால் உருகுவே அணியின் டிபன்ஸ் வீரர்களை தோற்கடிக்கலாம்.
france
உருகுவே உடனான போட்டி குறித்து பிரான்ஸ் அணியின் கேப்டன் ஹியூகோ லோரிஸ் கூறியதாவது “ எங்கள் அணியினை அரையிறுதி சுற்றுக்கு எடுத்து செல்ல வீரர்கள் உறுதி எடுத்துள்ளனர். நாங்கள் திறம்பட உருகுவே அணியை எதிர்க்கொள்வோம்” என்று கூறினார்.

சம பலமிக்க உருகுவே மற்றும் பிரான்ஸ் அணிகள் மோதும் போட்டி கால்பந்து ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாகவே அமையும்.

என்றார். – ஏஎப்பி