இந்தியாவின் அலட்சியத்தால் தாவுத் பெயரை பணமோசடி குற்றச்சாட்டில் இருந்து நீக்கிய அமெரிக்கா

மார்ச் 3, 2017 அன்று, அமெரிக்க வெளியுறவுத்துறை தனது 32 வது சர்வதேச போதைப் பொருள் கட்டுப்பாட்டு வியூகம்”யின் இரண்டாவது பகுதியாக “பணமோசடி மற்றும் நிதி குற்றங்கள்” அறிக்கையை வெளியிட்டது. சர்வதேச போதைப் பொருள் மற்றும் சட்ட அமலாக்க விவகாரங்களில் பணியகத்திற்கான ஐக்கிய அமெரிக்க உதவிச் செயலரான வில்லியம் ஆர் ப்ரவுன்ஃபீல்ட் , வாஷிங்டனில் பத்திரிக்கையாளர் சந்திப்பில், “நாம் ஒன்பது ஆண்டுகளாக ஆலோசித்து வருவதை முதல் முறையாக ஊடகம் முன்பு அறிக்கையாக வெளியிடுகின்றோம்” என்று தெரிவித்தார்.

2016 பதிப்பில் பயன்படுத்திய அதே பத்தியைப் பயன்படுத்திய இருந்தாலும், கனானி எம்.எல்.ஓ நிறுவனம், லஷ்கர்-இ-தொய்பா, தாவூத் இப்ராகிம், அல்-கொய்தா, மற்றும் ஜெய்ஸ்-இ-முகமது ஆகிவைக்கு பணம் வழங்கும் நிதிமோசடியில் ஈடுபட்டுள்ளது எனும் வரிகளை மட்டும் தவிர்த்து விட்டது. எம்.எல்.ஓ பெயர் நீக்கப்பட்டதற்கான காரணம் குறிப்பிடப் படவில்லை.

அமெரிக்க அளித்த தகவல்மீது தொடர்ந்து உரிய நடவடிக்கைகளை இந்திய அரசுஎடுக்கவில்லையென இந்தியாவை விமர்சித்துள்ளது.
எம்.எல். ஓ நிறுவனம்:

டிசம்பர் 2014 ல் தொடங்கிய ஒரு ரகசிய நடவடிக்கையின் பலனாய் அல்தாப் கனானி, இறுதியாகச் செப்டம்பர் 11, 2015 அன்று அமெரிக்க போதை அமலாக்கப் பிரிவின் (டிஇஏ) குற்றச்சாட்டிற்கு இணங்கக் கைது செய்யப்பட்டார். டிசம்பர் 11, 2015 அன்று, அமெரிக்க கருவூலத்துறை கனானி பணப்புழக்க நிறுவனம் மற்றும் துபாயை தளமாகக் கொண்ட அல் சரூனி ஆகியவை, நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செலாவணிக் குற்றம் இழைத்துள்ளதாக உறுதி செய்தது. புளோரிடா நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக் கொண்ட கனானி, தற்போது இப்போது சிறையில் இருக்கும் அவருக்கு 20 ஆண்டுகள் அதிகபட்ச தண்டனை மற்றும் $ 250,000 அபராதமும் விதிக்கப்படலாம். கனானி மற்றும் வழக்கறிஞர் இடையே விவாத உடன்பாடு 2016,அக்டோபர் 27 ம் தேதி கையெழுத்தானது. இந்த உடன்படிக்கைபடி ஒரே ஒரு வழக்கில் தண்டனையும் , இன்னும் சில ஆண்டுகளில் விடுதலையும் செய்யப்படலாம். அவர்மீது 14 வழக்குகளும் அதிகபட்சமாக 280 ஆண்டுகள்வரை சிறைத் தண்டனையும் எதிநோக்கி இருந்தார்.

அல்டாஃப் சகோதரர் மற்றும் இணை-குற்றவாளியாக இந்த வழக்கில் குற்றம் சாட்டப் பட்டிருந்த ஜாவேத் கனானி மர்மமான முறையில் டிசம்பர் 4, 2016 அன்று கராச்சியில் இறந்து கிடந்தார்.

“ அந்நிய செலாவணி மோசடிமூலம் குவிக்கப்பட்ட கள்ள வருமானத்தைப் பறிமுதல்செய்வதில் அமெரிக்க புலனாய்வு துறையினருக்கு மிகப் குறைந்த ஒத்துழைப்பையே இந்திய அதிகாரிகள் வழங்கினார்கள். அமெரிக்க சட்ட அமலாக்க அதிகாரிகள் வழங்கப்பட்ட புலனாய்வு மற்றும் உளவுத்துறை தகவல், இந்தியாவிற்கு ஏராளமான பணம் கைப்பற்ற உத்வி இருந்தாலும், முறையான புலனாய்வு தடங்களைப் முறையாக ஆராய்ந்து, மூலகர்த்தாக்களை கைது செய்யும் முனைப்பை இந்திய அரசு காட்டாதது ஏன் என்று தெரியவில்லை. “ என்றும் அது குற்றம்சாட்டியுள்ளது.
இந்தியா பரஸ்பர சட்ட உதவி கோரிக்கைகளை செயல்படுத்தும் திறனை அதிகரிக்க ஆர்வம் காட்டினாலும், உண்மையில் உதவி வழங்க விடாமல் தடுக்கும் வித்த்தில் அதன் அரச கட்டமைப்பு ஊழலால் சீர்குலைந்துள்ளது (அழுத்தம் சேர்க்கப்பட்டது).

மேலும், மோடி கொண்டுவந்துள்ள பணபதிப்பிழக்க நடவடிக்கை, அன்னியச் செலாவணி மோசடியைக் கட்டுப்படுத்த வில்லையெனக் குறிப்பிட்டுள்ளது.
இறுதியாக, அந்த அறிக்கையில், இந்தியாவில் பண மோசடியில் நிறுவனங்கள் ஈடுபடுவதைத் தடுக்க ஒரு வழியாக மொபைல்போனின் பணப் பறிமாற்றம் செய்யும் “மொபைல் பேங்க்கிங்”யை விரைவாகச் செயல்படுத்த பரிந்துரை செய்துள்ளது.