ஈரானிடம் இருந்து எண்ணெய்… இந்தியா உள்ளிட்ட ஏழு நாடுகளுக்கு கெடுவை தளர்த்தியது அமெரிக்கா

ரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு பொருளாதார தடை விதிக்கப்படும் என மிரட்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தற்போது பயந்து பின்வாங்கியுள்ளார்.

அமெரிக்க அதிபராக டொனால்டு ட்ரம்ப் பதவியேற்ற பிறகு, “ஈரானுடனான முந்தைய அரசு செய்துகொண்ட அணு சக்தி ஒப்பந்தம் பைத்தியக்காரத்தனமானது. அந்த ஒப்பந்தத்தை முறிப்பேன்” என்று  அறவித்தார். அதே போல  அதே போல ஈரானுடனான ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகியது.  ஆனால் அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்த பிற நாடுகள் ஈரானுக்கு ஆதரவு தெரிவித்தன.

இந்த நிலையில் இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நிறுத்திக்கொள்ள வேண்டும் என்றும் இல்லாவிட்டால் கடும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் ட்ரம்ப் மிரட்டல் விடுத்தார்.

ஆனால்  நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகும் ஈரானிடமிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கும் என்று இந்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார்.

இந்தநிலையில் ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் இந்தியா, ஜப்பான், தென் கொரியா உள்ளிட்ட 7 நாடுகளுக்கு தற்காலிகமாக அமெரிக்க விலக்கு அளிக்க உள்ளதாகவும்  அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ இதனை அதிகாரபூர்வமாக விரைவில் அறிவிப்பார் என்றும் தகவல் வெளியாகி இருக்கிறது.

இதுகுறித்து அமெரிக்க அதிகாரிகள் தரப்பில் கூறுகையில் ‘‘ஈரான் ஈட்டும் பணத்தை பயங்கரவாதத்துக்கு செலவிடுகிறது. ஆகவே அந்த நாடு நிதி குவிப்பதை தடுக்க முயன்று வருகிறோம். ஈரானிடம் இருந்து நவம்பர் 5-ம் தேதிக்கு பிறகு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகள் மீது பொருளாதார தடை விதிக்கப்படும் என அறிவித்து இருந்தோம்.

ஆனாலும் சர்வதேச சூழலை கருத்தில் கொண்டு ஈரானிடம் இருந்து 7 நாடுகள் கச்சா எண்ணெய் வாங்க தற்காலிகமாக அனுமதிக்க முடிவு செய்திருக்கிறோம்.   விலக்கு அளிக்கப்பட்ட நாடுகளும் விரைவில் ஈரானிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். நீண்ட நாட்களுக்கு இதனை தொடர முடியாது’’ என தெரிவித்துள்ளார்கல்.

ஈரானிடம் இருந்து அதிகஅளவு கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் சீனா உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகளுக்கு அமெரிக்கா தற்காலிகமாக விலக்கு அளித்துள்ளபோதிலும், சீனாவுக்கு விலக்கு அளிக்கப்படவில்லை. இதுகுறித்து சீனாவுடன், அமெரிக்கா தரப்பில் பேச்சவார்த்தை நடந்து வருவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.