அமெரிக்கா விமான தாக்குதல்: சிரியாவில் 56 பேர் பலி

 

சிரியா:

சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பினர் மீது போடப்பட்ட குண்டு, பொதுமக்கள் மத்தியில் விழுந்ததால் 56 பேர் கொல்லப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கிறது.

syria attack

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் ஐ.எஸ். தீவிரவாத அமைப்பு  ஈராக், சிரியா போன்ற நாடுகளை கைப்பற்றி  தனது ஆளுமையின் கீழ் வைத்துள்ளது. ஐஎஸ் தீவிரவாதிகளிடமிருந்து சிரியா  நாட்டை மீட்க  அமெரிக்கா, மற்றும்  நட்பு நாடுகள் ஒன்றுசேர்ந்து ஐஎஸ் தீவிரவாதிகள் முகாம்மீது தாக்குதல் நடத்திவருகின்றனர்.
இதன் காரணமாக அமெரிக்க கூட்டு படைகள் ஐ.எஸ் அமைப்பினர் உள்ள இடத்தை நோக்கி    வான்வழி தாக்குதல் மூலம் குண்டுகள் வீசினர்.

இந்த தாக்குதலில் குண்டு தவறுதலாக பொது மக்கள் வசிக்கும் பகுதிகளில் விழுந்துவிட்டது. இதில் 12 சிறுவர்கள் உள்பட 56  பொதுமக்கள் கொல்லப்பட்டதாக மனித உரிமை கண்காணிப்பகம் தெரிவித்துள்ளது.