வாஷிங்டன்

மெரிக்காவில் பிஃபிஸர் நிறுவன கொரோனா தடுப்பூசியை 12 – 15 வயதுடையவர்களுக்குப் போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

உலகெங்கும் கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.   இதையொட்டி உலக நாடுகளில் கொரோனா த்டுப்பூசி போடும் பணிகள் மும்முரமாக நடந்து வருகின்றன.  இவற்றில் பெரும்பாலான கொரோனா தடுப்பூசிகள் வயது வந்தோருக்கு மட்டுமே போட ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அவ்வகையில் பிஃபிஸர் நிறுவன தடுப்பூசி உலகின் பல நாடுகளில் 18 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கு மட்டுமே போடப்பட்டு வந்துள்ளது.   சமீபத்தில் உலக நாடுகளில் முதல் நாடாக கனடாவில் இந்த தடுப்பூசி மருந்தை 12 மற்றும் அதற்கு மேற்பட்டோருக்குப் போட அனுமதி அளிக்கபடது.  இதற்குப் பெற்றோர்கள், பள்ளி நிர்வாகிகள் மற்றும் சுகாதார அதிகாரிகள் ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர்.

இதை தொடர்ந்து பிஃபிஸர் நிறுவனம் அமெரிக்க உணவு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு நிறுவனத்திடம் தங்கள் தடுப்பூசியை 12 முதல் 18 வயது வரை உள்ளவர்களுக்கும் போட அனுமதிக்குமாறு கேட்டுக் கொண்டனர்.  எனவே இது குறித்து ஆய்வு செய்த அமெரிக்கா இந்த தடுப்பூசியை 12 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் போடலாம் என ஏற்கனவே உள்ள அனுமதியின் வயது வரம்பை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.