ண்டன்

சீனாவின் பிரபல ஹுவாய் நிறுவனத் தயாரிப்புக்களுக்கு அமெரிக்காவைப் போலப் பிரிட்டன் அரசும் தடை விதித்துள்ளது.

சீனா மற்றும் அமெரிக்கா இடையே வர்த்தகப்போர் நாளுக்கு நாள் வலுவடைந்து வருகிறது.   சீனப் பொருட்களுக்கு அமெரிக்கா வரி விகிதத்தை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.   சீனாவும் அதே போக்கை கடைப்பிடிக்கிறது.   இதன் உச்சக்கட்டமாகச் சீனாவின் புகழ்பெற்ற தொலைத் தொடர்பு பொருள் தயாரிப்பு நிறுவனமான ஹுவாய் பொருட்களுக்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.

இந்த நிறுவனம்  தயாரிக்கும் தொலைத் தொடர்பு பொருட்கள் பிரிட்டனில் கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாகப் புழக்கத்தில் உள்ளன.   கடந்த சில காலமாகச் சீனாவுக்கும் பிரிட்டனுக்கும் இடையே கருத்து மோதல் வலுத்து வருகிறது.    தற்போது இந்த மோதல் காரணமாகப் பிரிட்டன் அரசும் அமெரிக்கா வழியில் ஹுவாய் நிறுவனப் பொருட்களுக்கு தடை விதித்துள்ளது.

பிரிட்டன் நாடாளுமன்றத்தில் அந்நாட்டு டிஜிடல் துறை அமைச்சர் ஆலிவர் டவுடடன் நேற்று ஹுவாய் பொருட்களுக்குத் தடை விதிக்கும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.  இந்த முடிவு பிரிட்டன் பிரதமர் தனது அமைச்சரவை மற்றும் தேசியப் பாதுகாப்புக் குழுவுடன் ஆலோசனை நடத்திய பிறகு எடுத்துள்ளதாக அவர் தனது அறிவிப்பில் கூறி உள்ளார்.