கொரோனா : இந்தியாவிடம் மருந்து அனுப்ப கோரிக்கை விடுத்த அமெரிக்கா

வாஷிங்டன்

கொரோனா தாக்குதலுக்கு உள்ளானோருக்கு வழங்க ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை இந்தியாவிடம் இருந்து அமெரிக்கா கோரி உள்ளது.

கொரோனாவால் அமெரிக்காவில் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.  நேற்று வரை அமெரிக்காவில் 3,11,357 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவலகள் தெரிவிக்கின்றன..  இது உலக அளவில் பாதிக்கப்பட்டோரில் 25%க்கும் அதிகமாகும்.   இதைக் கட்டுப்படுத்த அமெரிக்கா முயன்று வருகிறது.

கொரோனா சிகிச்சைக்கான சரியான மருந்து மற்றும் தடுப்பூசிகள் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.   உலகின் பல நாடுகளும் இதற்கு முயன்று வருகின்றன.  இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் கொரோனா சிகிச்சைக்காக ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் என்னும் மாத்திரை பயன்படுத்தப்பட்டு வருகிறது.

நேற்று அமெரிக்க அதிபர் வெள்ளை மாளிகையில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், “கொரோனாவால் பாதிக்கபடோர் சிகிச்சைக்காக இந்தியப் பிரதமர் மோடியிடம்  நான் ஹைட்ராக்ஸிக்ளோரோகுவின் மாத்திரைகளை அதிக அளவில் அனுப்புமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்.  தேவைப்பட்டால் நானும் எடுத்துக் கொள்வேன், மருத்துவர்களுக்கு பரிந்துரைப்பேன்” எனக் கூறி உள்ளார்.