அமெரிக்க அரசு தனது நாட்டின் நலன்களும், பாதுகாப்பும் ஆபத்தில் இருப்பதை அறிந்திருக்க வேண்டும் என ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார்.

ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி கடந்த செவ்வாய் அன்று தனது பிரெஞ்சு தூதுவரான இம்மானுவேல் மக்ரோனிடம், அமெரிக்காவின் நலன்களும், பாதுகாப்பும் ஆபத்தில் உள்ளது என கூறியிருப்பதாக இம்மானுவேல் மக்ரோனின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவின் முக்கிய நகரங்களின் நலன்களும், பாதுகாப்பு அம்சங்களும் ஆபத்தில் இருப்பதை அமெரிக்க நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும். இந்த மாபெரும் குற்றத்தின் விளைவுகளிலிருந்து அமெரிக்காவால் தப்பிக்க முடியாது.என மக்ரோனுடனான தொலைப்பேசி உரையாடலின் போது ஈரான் அதிபர் பேசியதாக அந்நாட்டு தரப்பிலான அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்பின் உத்தரவின் பேரில், பாக்தாத்தில் உள்ள விமானப்படை தளத்தில் ட்ரோன் தாக்குதல் மூலம் ஈரான் குவாட் ராணுவ படையின் ஜெனரல் குஸ்ஸம் சுலைமானி கடந்த வெள்ளிக்கிழமை கொல்லப்பட்டிருப்பது, இரு நாடுகளுக்கு இடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மீது ஈரான் பதில் தாக்குதல் நடத்தினால், ஈரானின் முக்கியமான 52 இடங்கள் மீது தாக்குதல் நடத்துவோம் என ஏற்கனவே அமெரிக்க அதிபர் டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், சுலைமானியை படுகொலை செய்திருப்பதன் மூலம் அமெரிக்கர்கள் மாபெரும் தவறை செய்துவிட்டார்கள் என ஈரான் அதிபர் ஹசன் ரூஹானி தெரிவித்துள்ளார். இந்த படுகொலைக்கு, அமெரிக்க எதிர்பார்க்கும் பதிலடிகள் நிச்சயம் உண்டு என்றும், இந்த படுகொலையின் மூலம் ஈரானிய மக்களிடம் ஒற்றுமை பலப்பட்டிருப்பதாகவும் மக்னோனிடம், ஹசன் ரூசானி தெரிவித்திருக்கிறார்.

மேலும், ஈரான் இஸ்லாமிய குடியரசு ஒருபோதும் அமெரிக்கா உடன் போர் நடத்துவதை விரும்பவில்லை என்றும், அதேநேரம், நாட்டின் உரிமைகளையும், இறையாண்மையையும் பாதுகாக்க அரசு தயங்காது என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.