வாஷிங்டன்: அமெரிக்க தலைநகரில் எழுந்த பாதுகாப்பு எச்சரிக்கையை அடுத்து, அந்நாட்டு நாடாளுமன்ற கட்டட வளாகம் மூடப்பட்டது. இதனையடுத்து, ஜோ பைடன் பதவியேற்பு விழாவுக்கான ஒத்திகை நிறுத்தப்பட்டது.

ஜனவரி 20ம் தேதி, புதன்கிழமை அமெரிக்க அதிபராக பதவியேற்றவுள்ளார் ஜோ பைடன். இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடத்திற்கு அருகே புகை எழுந்ததால், எச்சரிக்கை காரணமாக நாடாளுமன்ற வளாகம் மூடப்பட்டதாக கூறப்படுகிறது.

ஜனவரி 6ம் தேதியன்று, தற்போதைய அதிபர் டிரம்ப்பின் ஆதரவாளர்கள் நடத்திய வன்முறையில் பலர் பலியானார்கள். இதனையடுத்து, கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அமெரிக்க நாடாளுமன்ற வளாகம் அமைந்துள்ள கேபிடல் ஹில் மற்றும் அதனைச் சுற்றிய பகுதிகளில் ஆயிரக்கணக்கான தேசிய பாதுகாப்பு படையினர் காவலுக்கு நிறுத்தப்பட்டுள்ளனர் என்று தகவல்கள் வருகின்றன.

அதேசமயம், பொதுமக்களுக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லை என்றும், நாடாளுமன்றத்திற்கு மட்டுமே இடைக்கால ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.