வாஷிங்டன்

ரும் ஜூலை மாதத்துக்குள் எஸ் 400 ரஷ்ய ஏவுகணை வாங்குவதை நிறுத்தாவிட்டால் அமெரிக்க போர்விமானம் விற்கப்படமாட்டாது என அமெரிக்கா கெடு விதித்துள்ளது.

ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணை என்பது வான் மூலம் தாக்க வரும் ஏவுகணையை தரை கட்டுப்பாடு வழியாக இடைமறித்து அழிக்கக் கூடிய ஏவுகனை ஆகும். இந்த ஏவுகணையின் இலக்கு 400 கிமீ ஆகும். ஒரே அமைப்பின் மூலம் 80 இலக்குகளை துல்லியமாக தாக்க முடியும் வானில் பறக்கும் ஆளில்லா விமானங்களில் இருந்து போர் விமானங்கள் வரிஅ அனைத்தும் இந்த ஏவுகனை மூலம் தாக்க முடியும்.

நேட்டோ நாடுகளில் ஒன்றான துருக்கி நாடு ரஷ்யாவிடம் இருந்து எஸ் 400 மற்றும் அமெரிக்காவில் இருந்து எஃப்35 ரக போர் விமானம் ஆகிய இரண்டையும் கொள்முதல் செய்ய ஒப்பந்தம் இட்டுள்ளது. அமெரிக்கா எஸ் 400 ஏவுகனைக்கு எதிரான நிலைப்பாட்டை கொண்டுள்ள்து. இது நேட்டோ நாடுகளின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமெரிகா கருது கிறது

துருக்கி நாடு அமெரிக்காவிடம் இருந்து எஃப் 35 ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த ரக போர் விமாணங்களுக்கான 937 உதிரி பாகங்களை துருக்கி நிறுவனங்கள் தயாரித்து வருகின்றன. இந்த ரக விமானங்களை ஓட்டும் பயிற்சி அளிக்க துருக்கி நாட்டின் 42 விமான ஓட்டிகள் அமெரிக்காவுக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் அமெரிக்காவின் பாதுகாப்பு துறையான பெண்டகன் செயலர் அனுபிய கடிதத்தில் ஒரே நேரத்தில் நேட்டோ விதிகளின் படி அமெரிக்க போர் விமானம் மற்றும் ரஷ்ய ஏவுகணைகள் ஆகிய இரண்டையும் துருக்கியால் கொள்முதல் செய்ய முடியாது எனவும் எஸ் 400 ஒப்பந்தத்தை துருக்கி வரும் ஜூலை மாதத்துக்குள் ரத்து சேய்ய வேண்டும் எனவும் கெடு விதித்துள்ளத்து.

அவ்வாறு இல்லை எனில் போர் விமானங்கள் விற்பனை நிறுத்தப்படும் என தெரிவித்துள்ளது. இதன் முதல் கட்டமாக துருக்கி நாட்டு விமானிகள் திருப்பி அனுப்பபட்டுள்ளனர். இது துருக்கி நாட்டை மட்டுமின்றி இந்தியாவையும் அதிர்ச்சியைல் ஆழ்த்தி உள்ளது.

இந்தியாவும் அமெரிக்காவிடம் இருந்து எஃப் 35 ரக போர் விமானங்கள் வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. அத்துடன் ரஷ்யாவின் எஸ் 400 ஏவுகணைகளுக்கும் ஒப்பந்தம் செய்துள்ளது. எனவே துருக்கிக்கு அமெரிக்காவால் விடப்பட்டுள்ள எச்சரிக்கை இந்தியாவுக்கும் பொருந்தக் கூடியதே என கூறப்படுகிறது.