பாகிஸ்தான் வான்வெளியில் விமானங்கள் பறக்க வேண்டாம் : அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன்

மெரிக்க நாட்டு விமானங்கள் பாகிஸ்தான் விண்வெளியில் பறக்க வேண்டாம் என அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.

கடந்த ஞாயிறு அன்று அமெரிக்கா நடத்திய விண்வெளித் தாக்குதலில் ஈரான் நாட்டுப் போர் விமானங்கள் பல தாக்கப்பட்டன.   இது இஸ்லாமிய நாடுகள் இடையே கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியது.   இதையொட்டி செவ்வாய்க்கிழமை அன்று பாக்தாதில் உள்ள அமெரிக்கத் தூதரகம் முன்பு ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் போராட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்தில் ராணுவ உடை அணிந்த போராட்டக்காரர்களும், பெண்களும் அலுவலகத்தின் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தினார்கள்.   அத்துடன் தீவிரவாத இயக்கமான ஹஷேத் அல் ஷாதி இயக்கத்தின் கொடிகளை அசைத்து எதிர்ப்பு தெரிவித்தனர்   அவர்களை தூதரகத்தில் இருந்த அமெரிக்க காவல்படையினர் கண்ணீர்ப் புகைக் குண்டுகளைக் கொண்டு கூட்டத்தை கலைத்தனர்.

இதையொட்டி அனைத்து இஸ்லாமிய நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கங்களும் அமெரிக்காவுக்கு மிரட்டல் விடுத்துள்ளதாக கூறப்படுகிறது.  இதனால் அமெரிக்க அரசு தங்கள் நாட்டின் அரசு மற்றும் தனியார் விமானங்களைப் பாகிஸ்தான் நாட்டு வான்வழியில் பயணம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தி உள்ளது.

அமெரிக்க விமான பயணத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “பாகிஸ்தான் நாட்டில் உள்ள தீவிரவாத மற்றும் பயங்கரவாத குழுக்கள் அமெரிக்க விமானங்களைத் தாக்கத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிய வந்துள்ளது.  எனவே பாகிஸ்தான் விண்வெளியில் பயணம் செய்ய வேண்டாம் என வலியுறுத்தப்படுகிறது.   அவாறு பயணம் செய நேர்ந்தால் மிகவும் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொள்ளப்படுகிறது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: air attack, cautioned, Iran fighter jets, pakistan airspace, Patrikaidotcom, protest, tamil news, US, US flights, அமெரிக்கா, ஈரான், எச்சரிக்கை, பாகிஸ்தான் வான் வழி, போரட்டம், விண்வெளித் தாக்குதல், விமானங்கள்
-=-