ஆகாயத்தில் பறக்கும் டாக்சி – விரையில் துபாயில் அறிமுகம்

விரையில் துபாயில் ஆளில்லா டாக்சியை அமெரிக்கா அறிமுப்படுத்தப்பட உள்ளது. புதிதாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த டாக்சி ஆகாயத்திலும், தரையிலும் செல்லக்கூடிய வகையில் நவீன தொழில்நுட்பத்தினால் உருவாக்கப்பட்டுள்ளது.

flying

அமெரிக்காவை சேர்ந்த விமானா குளோபல் என்ற நிறுவனம் சமீபத்தில் வானத்தில் பறக்கும் வாகனத்தை வடிவமைத்து உலகளாவிய அளவில் அதனை சோதனை செய்தது. ஆளில்லா இந்த டாக்சி ஒரு சில ஆண்டுகளில் நகர்புறங்களில் பயன்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

இது குறித்து விமான குளோபல் நிறுவனத்தின் சி.இ.ஓ. கூறுகையில் ” 2022ல் வானத்தில் பறக்கும் புதிய டாக்சியை அறிமுகப்படுத்தப்பட உள்ளோம். அதற்கான ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி விட்டன. முதலில் துபாயில் இருந்து டாக்சியை பறக்க வைப்பதற்காக அனுமதி கிடைத்த நிலையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இது விண்வெளி இயங்குதளத்தை சார்ந்து தயாரிக்கப்படுகிறது “ என்று கூறினார்.

மேலும், இதை சோதனை செய்வதற்காக நாங்கள் தேர்வு செய்யப்பட்ட இடங்களில் முதலில் துபாய் இருந்தது. காரணம் டாக்சி பறக்க ஏற்றவாறு துபாய் நகரை சுற்றி பனிப்படலங்கள் குறைவாக காணப்படுகின்றன. துபாய் அரசும் எங்களுக்கு உரிய ஒத்துழைப்பை வழங்கி வருகிறது என்றார்.

தன்னிச்சையாக பறக்கும் இந்த வகை டாக்சியை ஜெர்மனியின் ட்ரோன் நிறுவனம் தயாரித்து வருகிறது. பைலட் இல்லாமல் இயங்கும் இந்த டாக்சிக்களை இரண்டு பேர் இயக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டு துபாயின் சாலை மற்றும் போக்குவரத்து துறை சார்பில் பறக்கும் வாகனத்தை தயாரித்து சோதனையிட்டது குறிப்பிடத்தக்கது.