வாஷிங்டன்

கொரோனா தொற்று கடுமையாகப் பரவி வரும் வேளையைச் சாதகமாக்கி இந்திய எல்லை பிரச்சினையைச் சீனா கிளப்பி உள்ளதாக அமெரிக்கா கூறி உள்ளது.

இந்திய எல்லையில் முகாமிட்டிருந்த சீனப்படைகளை பல மட்ட பேச்சு வார்த்தைகளுக்குப் பிறகு திருப்பி அழைத்துக் கொள்ள அரசு ஒப்புக் கொண்டது.   ஆனால் சீனப்படைகள் திரும்பிச் செல்லும் போது இந்திய ராணுவத்தினர் மீது நடத்திய தாக்குதலில் 20 வீரர்கள் உயிர் இழந்தனர்.  இது உலக நாடுகள் அனைத்தையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இது குறித்து அமெரிக்காவின் கிழக்கு ஆசிய மற்றும் பசிபிக் பகுதி உதவி செயலாளர் டேவிட் ஸ்டில்வெல், “உலக நாடுகளின் கவனம் முழுவதும் தற்போது கொரோனா பரவுதலில் உள்ளது.  மக்கள் அனைவரும் வாழ்வா சாவா என்னும் பிரச்சினையில் உள்ளனர்.  இதில் இருந்து எவ்வாறு மீள்வது என்பதே பலரது கவனத்தில் உள்ளது.  இதை தங்களுக்குச் சாதகமாக இந்திய எல்லை பிரச்சினையில் சீன பயன்படுத்த எண்ணி உள்ளது.

இந்தியச் சீன எல்லை விவகாரத்தை அமெரிக்க அரசு கூர்ந்து கவனித்து வருகிறது.  சீன ராணுவமான மக்கள் விடுதலைப் படை இந்திய எல்லைப்பகுதியில் மிகவும் ஆழமாக அதிக தூரம் ஊடுருவி உள்ளனர்.  இது பேச்சு வார்த்தைக்கான தந்திரமா அல்லது தங்கள் வலிமையைக் காட்டும் செயலா என்பது விளங்கவில்லை.

இதே போன்று டோக்லாமிலும் நடைபெற்றது.  மொத்தத்தில் இந்தியா, ஹாங்காங், சீனக் கடல் பகுதி உள்ளிட்டவற்றில் சீன ராணுவ செயல்பாடுகள் ஆக்கப்பூர்வமானவை அல்ல என அமெரிக்கா கருதுகிறது. இவை எல்லாம் வணிகம் அல்லது வர்த்தகம் தொடர்பானது இல்லை என்பது நன்கு தெரிகிறது.   அமெரிக்கா சீன தரப்பில் நியாயமான விட்டுக்கொடுக்கும் உறவுகளைத் தொடர விரும்புகிறது.

சீன வெளியுறவுத் துறை அமைச்சருடன் அமெரிக்காவின்ல் மைக் பாம்பியோ நடத்திய  பேச்சு வார்த்தையில் கொரோனா தொற்று பரவியது குறித்த முழு விளக்கக்களையும் அளிக்க வேண்டும் என வலியுறுத்தினார்.  இந்த விவகாரம் மக்கள் ஆரோக்கியம் தொடர்பானது என்பதால் அரசியலை மறந்து சீனா தகவல்களைப் பகிர வேண்டிய அவசியத்தை அவர் தெரிவித்தார்.  ஆனால் சீனா இதுவரை அதைத் தெரிவிக்கவில்லை.” எனக் கருத்து தெரிவித்துள்ளார்.