வாஷிங்டன்

மெரிக்காவில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாட்டைச் சமாளிக்க மாடர்னா தடுப்பூசியைப் பாதி பாதியாகச் செலுத்த முடியுமா என ஆய்வு நடந்து வருகிறது.

அமெரிக்காவில் மாடர்னா நிறுவனம் தயாரித்துள்ள கொரோனா தடுப்பூசி ஏற்கனவே 30000 பேருக்கு தலா 100 மைக்ரோகிராம் அளவுக்குச் செலுத்தப்பட்டு பரிசோதனை வெற்றி பெற்றுள்ளது.  இந்த மருந்துக்கு அனுமதி அளிக்கப்பட்டு மக்களுக்குச் செலுத்தும் பணி தொடங்கப்பட்டுள்ளது.

தற்போது கொரோனா தடுப்பூசிகளின் தேவை அதிகமாக உள்ளதால் இந்த மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்படலாம் என அஞ்சப்படுகிறது.   இதையொட்டி இந்த ஊசியை வழக்கமாகச் செலுத்தும் 100 மைக்ரோகிராம் அளவை பாதியாக்கி தலா 50 மைக்ரோகிராம் அளவுக்குச் செலுத்தலாம் என ஆலோசிக்கப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வை தடுப்பூசி ஆய்வு மைய இயக்குநர் ஜான் மர்சோலா நடத்தி வருகிறார்.  இந்த ஆய்வில் நடத்தி வரும் மர்சோலா இந்த பாதியளவு ஊசியைச் செலுத்தி இதன் மூலம் நோய் எதிர்ப்புச் சக்தி எந்த அளவுக்கு முன்னேறி உள்ளது என்பது குறித்துச் சோதித்து வருகிறார்.