ஐபிஎல் போட்டியில் பங்கேற்கும் முதல் அமெரிக்கர்!

ஷார்ஜா: கொல்கத்தா அணியிலிருந்து காயம் காரணமாக விலகிய வேகப்பந்து வீச்சாளர் இங்கிலாந்தின் ஹாரி கர்னேவுக்கு பதிலாக, அமெரிக்காவின் அலி கான் சேர்க்கப்பட்டுள்ளார்.

இவர், ஐபிஎல் தொடரில் விளையாடவுள்ள முதல் அமெரிக்கர் என்ற சிறப்பை பெற்றுள்ளார். சமீபத்தில் மேற்கிந்திய தீவுகளில் நடந்து முடிந்த சிபிஎல் தொடரில், இவர், கொல்கத்தாவின் மற்றொரு அணியான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடினார்.

இத்தொடரில், 8 போட்டிகளில் பங்கேற்று 8 விக்கெட் வீழ்த்தியதால், இந்த ஐபிஎல் தொடருக்காக கொல்கத்தா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் பாகிஸ்தான் பூர்வீகத்தைக் கொண்டவர்.