கொரோனா பாதிப்பு: அமெரிக்காவில் உயிரிழப்பு எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியது..

வாஷிங்டன்:

மெரிக்காவில் கொரோனா பாதிப்பால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 16 ஆயிரத்தை தாண்டியுள்ளதாகவெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் வல்லரசு நாடான அமெரிக்கா விழிபிதுங்கி நிற்கிறது. உலக அளவில் கொரோனா பாதிப்பு அமெரிக்காவில் தான் அதிக அளவில் காணப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, அமெரிக்காவில், 435,128 பேருக்கு கொரோனா பாதிப்பு காணப்படுகிறது. கொரோனா பாதிப்பால் அமெரிக்காவில் மட்டும் 16,500-பேர் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா பாதிப்பால், அமெரிக்காவில் வசித்து 11 இந்தியர்கள் பலியாகியுள்ளனர். மேலும் 16 இந்தியர்களுக்கு கொரோன தொற்று ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில், கொரோனா பாதிப்பால் உயிரிழந்த அனைத்து இந்தியர்களும் ஆண்களே ஆவர். பலியானவர்களில் 4 பேர் டாக்ஸி ஓட்டுநராக அமெரிக்காவில் பணிபுரிந்து வந்துள்ளனர்.

பணி நிமித்தமாகவும், கல்வி கற்கவும் அமெரிக்காவில் தங்கியுள்ள இந்தியர்களை கண்டறிந்து உதவும் பணியில் இந்திய தூதரகமும் , இந்திய அமெரிக்க வம்சாவளி அமைப்புகளும் களம் இறங்கியுள்ளன.