அமெரிக்கா : பாதுகாப்புத் துறை செயலர் திடீர் பதவி விலகல்

வாஷிங்டன்

மெரிக்க நாட்டு பாதுகாப்புத் துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

சிரியா நாட்டில் அதிபர் பஷார் அல் அசாத் இன் அரசு ப்படைகளுக்கும் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.     இந்த நாட்டில் ஐ எஸ் பயங்கர வாத குழுவும் இயங்கி வருகிறது.   கிளர்ச்சியாளர்களை ஒடுக்க அமெரிக்க படைகள் அங்கு சென்றன.    அத்துடன் ஐ எஸ் பயங்கர வாதிகள் பிடித்து வைத்திருந்த நக்ரங்களை அமெரிக்க படைகள் மீட்டன.

நேற்று முன் தினம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சிரியாவில் ஐ எஸ் பயங்கரவாதிகல் முழுமையாக தோற்கடிக்கபட்டுளதால் தனது படைகளை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.    இந்த அறிவிப்பு அமெரிகக் செனட் உறுப்பினர்களுக்கும்  அமெரிக்க ஆதரவு நாடுகளுக்கும் பெரும் அதிர்ச்சியை உண்டாக்கியது.

ஆயினும் அமெரிக்க அதிபர் தனது முடிவை மாற்றிக் கொள்ளவில்லை.   அமெரிக்க படைகளை சிரியாவில் இருந்து விலக்க தொடங்கி உள்ளார்.   இது மக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.   இந்நிலையில் அமெரிக்க பாதுகாப்புத் துறை செயலர் ஜேம்ஸ் மாட்டிஸ் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.   இது மேலும் பரபரப்பை உண்டாக்கி இருக்கிறது.