மனிதன் இயக்கும் விமானத்தை ஜெயிக்குமா செயற்கை நுண்ணறிவால் இயங்கும் விமானம்?

வாஷிங்டன்: மனிதன் இயக்கும் போர் விமானத்தோடு போட்டிபோடும் வகையிலான ஒரு ஆளில்லா மேம்பட்ட தானியங்கு டிரோன் விமானத்தை அமெரிக்க விமானப் படை தயாரித்து வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த இரண்டு தயாரிப்புகளுக்குமான சவால் 2021ம் ஆண்டு ஜூலை மாதம் திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தத் திட்டமானது, செயற்கை நுண்ணறிவின் மூலமாக, மனித விமான ஓட்டி இல்லாமலேயே இயங்கும் போர் விமான தயாரிப்புகளை ஊக்குவித்து, அத்துறையில் முன்னேற்றத்தைக் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அமெரிக்க ராணுவத் தலைமையகமான பெண்டகனின் கூட்டு செயற்கை நுண்ணறிவு மையத்தின் தலைவர் லெப்டினன்ட் கர்னல் ஜேக் ஷனாஹன், இந்தப் புதிய பரிசோதனையை “போல்டு போல்டு ஐடியா” என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஏர் ‍ஃபோர்ஸ் மேகஸின் என்ற பத்திரிகையானது, இந்த முயற்சியை ராணுவத்திற்கான “ஒரு பெரிய முன்னேற்ற ஆற்றல்” என்று குறிப்பிட்டுள்ளது.