வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் குறித்து சர்ச்சையை ஏற்படுத்தி உள்ள அதிபர் டிரம்ப், 3 மாகாணங்களில் ஓட்டு எண்ணிக்கையை எதிர்த்து   வழக்கு தொடர்ந்துள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தல் வாக்குப்பதிவு 3ந்தேதி முடிவடைந்தது. தற்போது அங்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும்கிறது. பல பல மாகாணங்களில் டிரம்பை எதிர்த்து போட்டியிட்ட பைடன் முன்னிலை பெற்று ஆட்சியை கைப்பற்றும் நிலையில் உள்ளார்.

அமெரிக்கா நாடாளுமன்றத்தில்  மொத்தம் 535 உறுப்பினர்கள் உள்ளனர். அதாவது காங்கிரசில் உள்ள செனட் சபையில் 100 செனட் உறுப்பினர்களும், பிரதிநிதிகள் சபையில் 435 பிரநிதிகளும் உள்ளனர். எந்த அவையில் எந்த கட்சி எவ்வள்வு உறுப்பினர்களை வெல்கிறது என்பதை பொறுத்தே சட்டங்களை இயற்ற முடியும். அதாவது புதிய சட்டங்களை அதிபர் இயற்ற வேண்டும் என்றால் இந்த செனட் மற்றும் பிரநிதிகள் சபையில் மெஜாரிட்டி இருக்க வேண்டும். இதனால் இங்கு அதிக இடங்களில் வெற்றிபெறுவது அவசியம் ஆகும்.

அதிபர் தேர்தலில் வெற்றி 270 வாக்குகள் தேவைப்படும் நிலையில், ஜோ பைடன் 264 வாக்குகள் பெற்றுள்ளார். டிரம்ப் 214 இடங்கள் மட்டுமே பெற்றுள்ளார். இதன் காரணமாக பைடன் அதிபராக தேர்வு செய்யப்படுவது உறுதியாகி உள்ளது.
இந்த நிலையில்,  தேர்தலில் பதிவான ஓட்டுகளை எண்ணுவதற்கு எதிராக பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில், டிரம்ப் தரப்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  விஸ்கான்சின் மாகாணத்தில் மறு ஓட்டு எண்ணிக்கை கேட்டு வழக்கு தொடர்வோம் எனவும் டிரம்ப் தரப்பில் கூறப்பட்டுள்ளது.
இது தொடர்பாக டிரம்ப்  தரப்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில்,  ஓட்டு எண்ணிக்கையை பார்வையிட அனுமதிக்கும் வரை ஓட்டு எண்ணிக்கையை நிறுத்த வேண்டும் என மிச்சிகன் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதாகவும்,  தற்போது வரை எண்ணப்பட்ட ஓட்டுக்களை மறு ஆய்வு செய்ய வேண்டும் கோரப்ப்ட்டிருக்கிறது.   இங்கு ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பிடன், முன்னிலையில் உள்ளார்.  மிச்சிகன் மாகாணத்தில் 16 எலெக்ட்ரல் ஓட்டுகள் உள்ளன. அதுபோல மிச்சிகன் மற்றும் ஜார்ஜியா மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
அதுபோல, பென்சில்வேனியா நிலவரம் தொடர்பாக  கூறிய டிரிம்பின் பிரசார குழுவைச் சேர்ந்த ஜஸ்டின் கிளார்க், பென்சில்வேனியாவில், மோசமான செயல்கள் நடக்கின்றன. குடியரசு கட்சிக்கு ஆதரவாக கிடைத்த ஓட்டுகளை நீர்த்து போக செய்ய ஜனநாயக கட்சியினர் முயற்சிக்கின்றனர். இனை தடுக்க, அதிபர் டிரம்ப் மற்றும் அவரது குழுவினர் கடுமையாக போராடுகின்றனர். இகுடியரசு கட்சி கண்காணிப்பாளர்களிடம் இருந்து ஓட்டு எண்ணிக்கை மற்றும் அது தொடர்பான நடவடிக்கைகள் மறைக்கப்படுகின்றன. இதனை தடுக்க வழக்கு தொடர்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.