வாஷிங்டன்:  நடைபெற்ற முடிந்த அமெரிக்க அதிபர்  தேர்தலில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றிக்கனியை பறிக்க சென்று கொண்டிருக்கிறார். இதற்கிடையில், வாக்கு எண்ணிக்கையில்  முறைகேடு நடைபெறுவதாக குற்றம் சாட்டி, அதிபர் டிரம்ப் தரப்பில் 4 மாகாணங்களில் வழக்கு தொடரப்பட்டது.
இதில், ஜார்ஜியா நீதிமன்றம் மற்றும் மிக்சிகன் மாகாணத்தின் நீதிமன்றமும், டிரம்பின் மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இது  டிரம்புக்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தி இருப்பதுடன்,  ஜோ பைடன் வெற்றிபெறுவது உறுதியாகி உள்ளது.
அமெரிக்க அதிபர் தேர்தல் வெற்றியின் விளிம்பின் ஜோ பைடன் இருந்துவருகிறார். அங்கு வெற்றி பெற 270 வாக்குகள் பெற வேண்டிய நிலையில்,  ஜோபைடன் 264 வாக்குகள் பெற்றுள்ளார். இன்னும் 6 வாக்குகள் மட்டுமே பெற வேண்டிய நிலை உள்ளது.  வாக்கு எண்ணிக்கையும் சில மாநிலங்களில் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தற்போதையஅதிபர் டிரம்ப் 214 வாக்குகள் மட்டுமே பெற்றுள்ளதால், அவரது தொல்வி உறுதியாகி உள்ளது. இதைப் பொறுத்துக்கொள்ள முடியாத டிரம்ப், அவாக்கு எண்ணிக்கைக்கு எதிரான நீதிமன்றங்களில் வழக்குகள்  தொடர்ந்தார். மேலும்,  வாக்கு எண்ணிக்கையில் குளறுபடி நடக்கிறது, சட்டப்படியாக வாக்குகளை எண்ணினால் நானே வெற்றி பெறுவேன் , பல முக்கிய மாகாணங்களில் நானே வெற்றி பெற்றிருக்கிறேன், நாங்கள் வரலாறு காணாத வகையிலான வாக்குகளுடன் வெற்றி பெற்றுள்ளோம்  என்று கூறியதுடன், அதிபர் தேர்தல் வெற்றியை எங்களிடம் இருந்து திருட ஜோபிடன் குழு முயற்சிக்கிறது என்று குற்றம் சுமத்தியிருந்தார்.
அதையடுத்து, டிரம்ப் தரப்பில் வாக்கு எண்ணிக்கையை நிறுத்த உத்தரவிடக்கோரி  பென்சில்வேனியா, மிச்சிகன், ஜார்ஜியா  மற்றும் விஸ்கான்சின்  மாகாணங்களில் வழங்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை  விசாரித்த  ஜார்ஜியா மாகாண  நீதிமன்றம் மற்றும்  மிக்சிகன்  மாகாண நிதிமன்றமும், டிரம்ப் தரப்பு மனுக்களை தள்ளுபடி செய்தது. ஜார்ஜியா நீதிமன்றத்தில் வாக்கு எண்ணிக்கை தொடர்பான ஆட்சேபனை தெரிவித்து டிரம்ப் தரப்பு தொடர்ந்த வழக்கை நீதிபதி ஜேம்ஸ் பாஸ் தள்ளுபடி செய்தார். மிக்சினில் போடப்பட்ட வழக்கும் நிராகரிக்கப்பட்டுள்ளது.
டிரம்பின் வழக்குகள் 2 மாகாணங்களில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ள, ஜோ பைடனுக்கு சாதகமாகி உள்ளது. , ஜார்ஜியாவின் பென்சில்வேனியாவில்  இருவருக்கும் இடையே இடைவெளி குறைவாகவே உள்ளது. அதேவேளையில்,  நெவாடாவின் அரிசோனாவில் பைடன் முன்னணி வகிக்கறார். அவரது வெற்றி 90 சதவிகிதம் உறுதியாகி உள்ளது.